பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஆளுகை அமைப்புகளில் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கிற்கு மத்திய அரசு ஏற்பாடு
प्रविष्टि तिथि:
27 JUN 2025 5:36PM by PIB Chennai
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் இன்று (2025 ஜூன் 27) “சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் ஆன்லைன் பாதுகாப்பு, சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பான இணைய நடைமுறைகள் குறித்து பெண்கள், குழந்தைகள் உட்பட பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்களப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கு சைபர் விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைகளைத் தெரியப்படுத்துவதை இது நோக்கமாக கொண்டிருந்தது.
இந்தப் பயிலரங்கில் தேசிய மகளிர் ஆணையம், சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டு நிறுவனம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தன்னாட்சி அமைப்புகள் உட்பட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
டிஜிட்டல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்து அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த உயர்மட்ட சைபர் பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்தப் பயிலரங்கில் விளக்கமளித்தனர். அதிகரித்து வரும் சைபர் குற்றத்தின் சிக்கலான தன்மை மற்றும் அதற்கேற்ப அதிக விழிப்புணர்வு, வலுவான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அவசியத்தை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் வல்லுநர்கள், எடுத்துரைத்தனர். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நோடல் நிறுவனம் சைபர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தது.
இந்தப் பயிலரங்கில் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் மாலிக், முக்கியமான தரவுகளைக் கையாளும் அரசு அதிகாரிகள், விழிப்புடன் இருப்பது அவசியம் எனத் தெரிவித்தார். இந்த பயிலரங்கு, சரியான நடைமுறைகளுடன் நம்மை தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சி என்றும் அவர் கூறினார். இதுபோன்ற பயிலரங்குகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140205
***
AD/TS/GK/AG/DL
(रिलीज़ आईडी: 2140250)
आगंतुक पटल : 6