தேர்தல் ஆணையம்
பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது
Posted On:
26 JUN 2025 5:28PM by PIB Chennai
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800-க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இவற்றில் பல இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 345 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இவை 2019-ம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை. மேலும் இவற்றிற்கு எங்கேயும் அலுவலகங்கள் இல்லை.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் தலைமையின் கீழ் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் இந்த 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இந்த கட்சிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தவும் வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் தேர்தல் ஆணையத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139881
***
TS/SMB/AG/DL
(Release ID: 2139949)
Visitor Counter : 4