நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
மும்பையில் உள்ள ஜியோ பார்சி பயனாளிகளுக்கான பயோமெட்ரிக் அங்கீகார இயக்கத்தை மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் நடத்துகிறது
प्रविष्टि तिथि:
26 JUN 2025 4:24PM by PIB Chennai
பார்சி சமூகத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், குறைந்து வரும் அந்த சமூகத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், ஜியோ பார்சி திட்டத்தின் பயனாளிகளுக்கான ஒரு நாள் பயோமெட்ரிக் அங்கீகார இயக்கத்தை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் இன்று மும்பையில் நடத்தியது.
அந்த அமைச்சகத்தின் துணை தலைமை இயக்குநர் திரு அலோக் குமார் வர்மா மற்றும் அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், மும்பை பார்சி பஞ்சாயத்து மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தனர். மும்பையில் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 148 பயனாளிகளில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு தங்களது கட்டாய வருடாந்திர பயோமெட்ரிக் அங்கீகாரத்தை நிறைவு செய்தனர்.
மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகத்தின் முதன்மை முயற்சியான ஜியோ பார்சி திட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது:
மருத்துவ உதவி – செயற்கை முறை கருத்தரிப்பு, வாடகைத் தாய் மற்றும் கருத்தரித்தலுக்குப் பிந்தைய பராமரிப்பு போன்ற சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.
சமூகத்தின் ஆரோக்கியம் - குழந்தைகளுடன் கூடிய பார்சி தம்பதிகளுக்கும், அவர்களை சார்ந்திருக்கும் மூத்த குடிமக்களுக்கும் மாதாந்திர நிதி உதவி வழங்குகிறது.
ஆதரவு - சமூகத்திற்குள் உரிய நேரத்தில் திருமணம், கருவுறுதல் விழிப்புணர்வு மற்றும் குடும்ப ஆதரவை ஊக்குவிப்பது.
இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது ஜியோ பார்சி திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்வதற்கு இதுவரை 138 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இவை முறையான ஆய்வுக்கு உட்டுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகச்சிறிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற சமூகங்களில் ஒன்றான பார்சி சமூகத்தின் கலாச்சாரம், மக்கள்தொகையை பராமரிப்பதற்கு ஜியோ பார்சி திட்டம் உதவுகிறது. இன்று நடத்தப்பட்ட பயோமெட்ரிக் இயக்கம், பார்சி சமூகத்திற்கு வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தொடர் நன்மைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
***
(Release ID: 2139841)
AD/TS/SV/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2139931)
आगंतुक पटल : 8