தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச், சேர்ந்த பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
20 JUN 2025 2:42PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் மண்டலத்தைச் சேர்ந்த நாராயணபுரம் கிராமத்தில், வசிக்கும் நபர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், கடன் கொடுத்தவர் அவரது மனைவியை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில் மனித உரிமைகள் மீறல் குறித்து ஆணையம் விசாரணை மேற்கொள்ளும். இதன்படி, இந்த விவகாரம் குறித்து இரண்டு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2137951
***
AD/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2138005)
வருகையாளர் எண்ணிக்கை : 13