உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடுகளை மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 15 JUN 2025 8:14PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை  அமைச்சர் திரு. அமித் ஷா, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடுகளை மத்திய உள்துறை செயலாளர், இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் புதுதில்லியில் ஆய்வு செய்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பு ஜூன் 16, 2025 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும்.

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில், ஒவ்வொரு வீட்டின் நிலைமைகள், சொத்துக்கள் மற்றும் வசதிகள் சேகரிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதாவது, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரின் சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக, சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொடங்கியதிலிருந்து 16வது மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.

 

வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு செல்பேசி செயலியைப்  பயன்படுத்தி டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் நடத்தப்படும். சுய கணக்கெடுப்பு வசதியும் மக்களுக்குக் கிடைக்கும்.

 

சேகரிப்பு, பரிமாற்றம் மற்றும் சேமிப்பின் போது தரவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிகவும் கடுமையான தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்.

AD/BR/KR

***


(रिलीज़ आईडी: 2136549) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Malayalam