மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், உலகளாவிய சிறந்த கல்வி இந்தியாவில் குறைந்த செலவில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது: மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்
Posted On:
14 JUN 2025 4:35PM by PIB Chennai
புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்வியை சர்வதேசமயமாக்குவதன் இலக்குகளை அடைவதில் கல்வி அமைச்சகம் ஒரு பெரிய நடவடிக்கையாக மும்பையில் 'சர்வதேச கல்வி நகரத்தை உருவாக்குதல்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவை ஒரு உலகளாவிய கல்வி மையமாக, குறைந்த செலவில் உயர்தரக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். இந்த முயற்சியின் மூலம், இந்தியாவை உலகளாவிய அறிவு மையமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். சிறந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள், இங்கு தங்களது வளாகங்களை நிறுவ இந்தியா ஊக்குவித்து வருகிறது என அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகளவில் விரிவுபடுத்த இது அதிகாரம் அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சி, கருத்துக்கள், திறமை, நம்பிக்கை ஆகியவற்றின் வளர்ந்து வரும் இருவழி இயக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். இந்தியா உலகளாவிய கல்வி சுற்றுச்சூழல் அமைப்பில் பங்கேற்பது மட்டுமல்லாமல் இந்தியா அதை வடிவமைக்கிறது என அவர் கூறினார்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மும்பை/நவி மும்பையில் தங்கள் இருப்பை நிலைநிறுத்துவது இதுவே முதல் முறை, மேலும் சில பல்கலைக்கழகங்கள் UGC (S) இன் கீழ் நவி மும்பையில் வரவிருக்கும் கல்வி நகரத்தில் வளாகங்களை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளின் 5 பல்கலைக்கழகங்கள் மும்பையில் வளாகங்களை நிறுவுவதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவில் இந்தப் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவுவது மாணவர்களுக்கு நன்மை பயக்கும்.
உயர்கல்வித் துறையின் செயலாளர் மற்றும் யுஜிசி-யின் தலைவர் டாக்டர் வினீத் ஜோஷி, தமது உரையில், கல்வியின் சர்வதேசமயமாக்கலை உறுதி செய்வதிலும், இந்தியாவின் பரந்த, ஆற்றல்மிக்க திறமையை வெளிப்படுத்துவதிலும் கல்வி அமைச்சகம் மற்றும் யுஜிசி-யின் பங்கை எடுத்துரைத்தார்.
மத்திய கல்வி அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகம், மகாராஷ்டிரா அரசு, பல்கலைக்கழக மானிய குழு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும், தூதரகங்களின் பிரமுகர்களும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களை அனுமதிக்கும் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
*****
(Release ID: 2136357)
AD/PLM/SG
(Release ID: 2136376)