பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் செயல்திறனின் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை குறித்த மே 2025க்கான 37வது மாதாந்திர அறிக்கையை மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டது

प्रविष्टि तिथि: 13 JUN 2025 6:42PM by PIB Chennai

மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் செயல்திறனின் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை குறித்த மே 2025க்கான 37வது மாதாந்திர அறிக்கையை மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டது. இது பொதுமக்கள்  குறைகளின் வகைகள் மற்றும் தீர்வுகளின் தன்மை பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.

 

இந்த அறிக்கையின்படி, மத்திய அமைச்சகங்கள்/துறைகளால் 1,24,101 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. 2025 மே 1 முதல் மே 31 வரை மத்திய அமைச்சகங்கள்/துறைகளில் சராசரி குறைகளுக்கான தீர்வு நேரம் 16 நாட்கள் ஆகும். இந்த அறிக்கை 2025 மே மாதத்தில் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறையின் தளம் மூலம் பதிவுசெய்யப்பட்ட புதிய பயனர்களுக்கான தரவை வழங்குகிறது. மே 2025இல் மொத்தம் 60,499 புதிய பயனர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், அதிகபட்ச பதிவுகள் உத்தரப்பிரதேசத்தில் (10,043 பதிவுகள்) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மே மாதத்தில் பொது சேவை மையங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட குறைகள் குறித்த அமைச்சகம்/துறை வாரியான பகுப்பாய்வையும் இந்த அறிக்கை வழங்குகிறது. மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை, பொது சேவை மைய தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களில் கிடைக்கிறது, இது 2.5 லட்சம் கிராம அளவிலான தொழில்முனைவோருடன் இணைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் பொது சேவை மையங்கள் மூலம் 5,653 குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136235

***

(Release ID: 2136235)

AD/RB/DL


(रिलीज़ आईडी: 2136284) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी