பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
குடும்ப ஓய்வூதியதாரர்கள், மிக மூத்த ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மூலம் நடத்தப்படவுள்ள ஒரு மாத கால சிறப்பு முகாம் 2.0-ஐ மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்
Posted On:
11 JUN 2025 4:05PM by PIB Chennai
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இது தொடர்பாக, குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மிக மூத்த ஓய்வூதியதாரர்களின் குறைகளை உரிய நேரத்தில் முறையாக தீர்வு காணும் நோக்கில், 2025 ஜூலை 1 முதல் 31 வரை ஒரு மாத கால சிறப்பு முகாம் 2.0-ஐ மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் 2.0-ஐ மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த இயக்கத்தின் கீழ், மொத்தம் 2210 ஓய்வூதியர்களின் குறைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்கு தீர்வு காண 51 அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளப்படும்.
ஓய்வூதியதாரர்களின் குறைகளைக் கையாளும் பொறுப்பு அதிகாரிகளுடன், செயலாளர் (ஓய்வூதியம்) தலைமையில் ஒரு ஆயத்தக் கூட்டம் 2025 ஜூன் 11 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு முகாம் 2.0-ஐ சுமூகமாகவும், தடையின்றியும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135678
----
AD/TS/IR/KPG/KR
(Release ID: 2135743)