தேர்தல் ஆணையம்
ஸ்டாக்ஹோம் சர்வதேச தேர்தல் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் சிறப்புரையாற்றினார்
Posted On:
11 JUN 2025 2:07PM by PIB Chennai
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், நேற்று மாலை ஸ்வீடனில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச தேர்தல் ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் தேர்தல் ஒருங்கிணைப்பு, அளவு மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். உலகெங்கிலும் உள்ள நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். உரிய நேர்மையுடன் தேர்தல்களை நடத்துவது நமது தேசிய உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும் என்று அவர் வலியுறுத்தினார். சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பயிற்சியின் மிகப்பெரிய அளவு, குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அரசியல் கட்சிகளின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவது குறித்தும் திரு. ஞானேஷ் குமார் பங்கேற்பாளர்களுக்குத் தெரிவித்தார்; வேட்பாளர்கள்; பொதுமக்கள், காவல்துறையினர், செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள், ஊடகங்கள் ஆகியோர் பல்வேறு கட்டங்களில் ஒரே நேரத்தில் தணிக்கையாளர்களைப் போலவே செயல்படுவதாக அவர் கூறினார். இந்தியாவில் தேர்தல்களை நடத்துவதற்கு அடிப்படையாக இருக்கும் ஒருங்கிணைப்பின் அளவையும் தலைமைத் தேர்தல் ஆணையர் எடுத்துரைத்தார். தேர்தல் நடைபெறம் தருணத்தில் வாக்குச்சாவடி ஊழியர்கள், காவல்துறையினர், பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் உட்பட 2 கோடிக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம், உலகின் மிகப்பெரிய அமைப்பாக திகழ்கிறது என்று கூறினார். பல்வேறு நாடுகளின் அரசுகள், முக்கிய உலகளாவிய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பணியாளர்களின் பணிகளைவிட இந்திய தேர்தல் ஆணையம் இந்தியாவின் சுமார் 100 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135620
----
AD/TS/IR/KPG/KR
(Release ID: 2135699)