வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்த சுவிஸ் தொழில்துறையுடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்
Posted On:
10 JUN 2025 11:59AM by PIB Chennai
இந்தியாவிற்கும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக அமைப்பிற்கும் இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் புதிய வழிமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டு, 2025 ஜூன் 9 அன்று சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில், சுவிஸ் தொழில்துறை தலைவர்களுடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் விரிவான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல முன்னணி சுவிஸ் நிறுவனங்களின் தலைவர்களை அமைச்சர் சந்தித்தார். இதில் புதுமை கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிலையான உற்பத்தி ஆகியவற்றில் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, இந்திய, சுவிஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், நாட்டின் துடிப்பான மற்றும் விரைவாக வளர்ந்து வரும் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளவும் சுவிஸ் நிறுவனங்களுக்கு அமைச்சர் அன்புடன் அழைப்பு விடுத்தார்.
வெளிப்படையான ஒழுங்குமுறை செயல்முறைகள், வலுவான அறிவுசார் சொத்துரிமை ஆட்சி மற்றும் முதலீட்டு சார்பு கொள்கை கட்டமைப்புகள் மூலம் உகந்த வணிகச் சூழலை வளர்ப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் தலைமையை திரு. கோயல் எடுத்துரைத்தார். இந்தியாவை ஒரு சந்தையாக மட்டுமல்லாமல், உற்பத்தி, திறமை மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கான ஒரு உத்தி சார்ந்த மையமாகவும் ஆராயுமாறு சுவிஸ் வணிகங்களை அவர் ஊக்குவித்தார்.
இந்த திட்டமிடப்பட்ட விவாதங்களைத் தொடர்ந்து, உயிரி தொழில்நுட்பம் & மருந்து, சுகாதாரம் மற்றும் துல்லிய பொறியியல், பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சுவிஸ் தொழில்துறையைச் சேர்ந்த துறைத் தலைவர்களுடன் இரண்டு கூட்டங்களுக்கு அமைச்சர் தலைமை தாங்கி இருந்தார்.
*******
(Release ID: 2135293)
AD/TS/IR/RR/KR
(Release ID: 2135342)