சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சொத்துக்களின் பண மதிப்புக்கான உத்திசார் ஆவணத்தை முதல் முறையாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது
Posted On:
09 JUN 2025 4:53PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலை சொத்துக்களின் செயல் மதிப்பை அறியவும், இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு – தனியார் துறை பங்களிப்பை அதிகரிக்கவும் முதன் முறையாக சாலைப் பிரிவுக்கான சொத்து பணமாக்கல் நடைமுறைக்கான ஆவணத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தேசிய பணமாக்கல் நடைமுறையின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளின் 6100 கிலோ மீட்டர் வழித்தடத்திலிருந்து ரூ.1.4 லட்சம் கோடி திரட்ட முடியும். அரசு சாலை சொத்துக்களின் மதிப்பை அதிகரித்தல், நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, முதலீட்டாளருக்கு தேவையான தகவல் வழங்குதல், முதலீட்டாளர் அடிப்படையை ஆழப்படுத்துதல், பங்குதாரர் ஈடுபாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் சந்தை உருவாக்கம் என்பவை இந்த நடைமுறையின் மூன்று முக்கிய அம்சங்களாகும்.
இந்த தனித்துவமான அணுகுமுறை பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வது மட்டுமின்றி, தனியார் துறைக்கு வாய்ப்புகளையும் வழங்குகிறது. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஊக்கமளிக்கிறது. நமது சாலை சொத்துக்களின் தரம் மற்றும் நீண்ட பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது என்று நடைமுறை ஆவணத்தை வெளியிட்டு பேசிய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ் தெரிவித்தார். இதன் வெற்றிகரமான அமலாக்கமானது சீரான நிதியை ஆணையத்திற்கு வழங்குவதோடு பாரம்பரிய முறையிலான நிதி ஆதாரங்களை நம்பியிருப்பது குறையும் என்று அவர் கூறினார்.
இந்த நடைமுறை ஆவணம் https://nhai.gov.in/nhai/sites/default/files/mix_file/Asset-Monetization_Strategy_Document.pdf
என்ற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135135
***
AD/TS/SMB/RR/KR
(Release ID: 2135208)
Visitor Counter : 2