வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஸ்விட்சர்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் அரசுமுறை பயணம்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                09 JUN 2025 1:00PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஜூன் 9–ம் தேதியிலிருந்து 13-ம் தேதி வரை ஸ்விட்சர்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு அரசு முறைப் பயணமாக செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, ஐரோப்பிய நாடுகளுடன் உத்திசார் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கவுள்ளார். 
அவரது இந்தப் பயணத்தின் போது ஸ்விட்சர்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுடனான வர்த்தக வாய்ப்புகள் குறித்து அந்நாட்டு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.    பின்னர் அந்நாட்டு தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்து வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்குவது குறித்தும் விவாதிக்கவுள்ளார். 
முதற்கட்டமாக ஸ்விட்சர்லாந்து செல்லும் அவர், அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவுள்ளார். சுகாதாரம், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 
தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஸ்வீடன் செல்லும் அவர், அந்நாட்டு வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பெஞ்சமின் டவுசாவுடன் பேச்சு நடத்துகிறார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இந்தியா- ஸ்வீடன் இடையே பொருளாதாரம், தொழில்துறை, அறிவியல்  ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளார். இரு நாடுகளின் வர்த்தகத்துறை அமைச்சர்கள்  தலைமையில் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் அறிவியல் கூட்டு ஆணையத்தின்  21-வது கூட்டம் நடைபெறவுள்ளது. 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135070 
***
AD/TS/SV/AG/KR
                
                
                
                
                
                (Release ID: 2135099)
                Visitor Counter : 4