சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
வக்ஃப் சொத்துக்களின் நிகழ்நேர பதிவேற்றம், சரிபார்ப்பு, கண்காணிப்புக்காக மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான உமீத் மைய போர்ட்டலை மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் தொடங்கிவைத்தார்.
Posted On:
06 JUN 2025 3:03PM by PIB Chennai
இந்தியாவின் வக்ஃப் சொத்து நிர்வாக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக உமீத் மைய போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது மட்டுமின்றி சாமானிய முஸ்லீம்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உமீத் மைய போர்ட்டலை இன்று தொடங்கிவைத்த அவர், இந்தப் போர்ட்டல் தொழில்நுட்ப மேன்மைப்படுத்தலைவிட கூடுதல் சிறப்பு உடையது என்றார். சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு இது ஓர் அடையாளம் என்று குறிப்பிட்ட திரு கிரண் ரிஜிஜூ, அந்த சமூகத்திற்கு சொந்தமான வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லீம்களுக்கு பயனுள்ள வகையிலும், நியாயமாகவும் பயன்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும் என்றார்.
மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான இது, வக்ஃப் சொத்துக்களின் நிகழ்நேர பதிவேற்றம், சரிபார்ப்பு, கண்காணிப்புக்காக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்தத் துறையின் இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமான இந்த இணைய போர்ட்டல் வக்ஃப் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்றும் வக்ஃப் நிர்வாகத்தை மக்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு வரும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134499
**
AD/TS/SMB/KPG/KR
(Release ID: 2134571)