பிரதமர் அலுவலகம்
பெங்களூருவில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUN 2025 7:52PM by PIB Chennai
பெங்களூருவில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"பெங்களூருவில் நிகழ்ந்த விபத்து, மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் @narendramodi"
***
(Release ID: 2133929)
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2133950)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam