பிரதமர் அலுவலகம்
பிரதமர் மோடியை ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் சந்தித்தார்
தேர்தலில் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக பிரதமர் துணைப் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடையும் இந்தியா - ஆஸ்திரேலியா விரிவான உத்தி சார்ந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆஸ்திரேலியா ஆதரவை துணைப் பிரதமர் மார்லஸ் மீண்டும் உறுதிபடுத்தினார்.
प्रविष्टि तिथि:
04 JUN 2025 4:09PM by PIB Chennai
ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸ், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். அண்மையில் நடைபெற்ற கூட்டாட்சித் தேர்தலில் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக துணைப் பிரதமர் மார்லஸூக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் இந்தியா - ஆஸ்திரேலியா விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகள், முக்கியமான கனிமங்கள், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் குறிப்பிட்டனர். நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதிக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை, இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து வழிநடத்துகிறது என்பதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆஸ்திரேலியாவின் ஆதரவை துணைப் பிரதமர் மார்லஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஆண்டு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அல்பானீஸுக்கு, பிரதமர் அழைப்பு விடுத்தார்.
----
(Release ID 2133802)
AD/SM/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2133834)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam