பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புதுதில்லியில் 04.06.2025 அன்று நடைபெறும் 13வது ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாமிற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்குகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 JUN 2025 6:20PM by PIB Chennai
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, 13வது ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாமை, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடத்தவுள்ளது. "குடும்ப ஓய்வூதியம்" என்ற கருப்பொருளில், 04.06.2025 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இந்த முகாம் நடைபெறும். 19 துறைகள்/அமைச்சகங்கள் சம்பந்தப்பட்ட குடும்ப ஓய்வூதிய விஷயங்கள் தொடர்பான 415 குறைகள், தீர்வுக்காக முகாமில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
குடும்ப ஓய்வூதியம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் அல்லது நடைமுறை தாமதங்கள் காரணமாக ஏற்பட்ட பெரிய அளவிலான நிலுவைத் தொகையாக இருந்தாலும், ஓய்வூதியம் முறையாக செயல்படுத்தப்பட்டு வழங்கப்படாததால் ஏற்பட்ட நீண்டகால மற்றும் நிலுவையில் உள்ள குறைகளைத் தீர்ப்பதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் தொகையை செலுத்துவதை எளிதாக்குவது இந்த முகாமின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133604
***
(Release ID: 2133604)
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2133650)
வருகையாளர் எண்ணிக்கை : 24