தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
“டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2025 4:09PM by PIB Chennai
“டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் டிஜிட்டல் இணைப்புக்கான சொத்துக்களின் மதிப்பீட்டை மதிப்பிடுவதற்கான ‘வரைவு கையேட்டை’ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2025 மே 13 அன்று வெளியிட்டது. இதுகுறித்த பங்குதாரர்களின் கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 ஜூன் 2 மற்றும் 2025 ஜூன் 9 என நிர்ணயிக்கப்பட்டது.
இந்த 'வரைவு கையேடு' மீதான கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிகளை ஒரு வாரம், அதாவது 2025 ஜூன் 9 வரை நீட்டிக்கவும், பதில் கருத்துகளை 2025 ஜூன் 16 வரை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பங்குதாரர்கள் பதிலளிக்க கூடுதல் நேரம் கிடைக்கும்.
கருத்துகள்/ பதில் கருத்துகளை ja2-qos1@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், adv-qos1@trai.gov.in என்ற மற்றுமொரு மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் அல்லது கூடுதல் தகவலுக்கு, பங்குதாரர்கள் +91-11-20907759 என்ற எண்ணில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய ஆலோசகர் தேஜ்பால் சிங்கைத் தொடர்பு கொள்ளலாம்.
***
Release ID 2133283
AD/TS/GK/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2133302)
வருகையாளர் எண்ணிக்கை : 10