தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஒடிசாவில் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரை, இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAY 2025 5:34PM by PIB Chennai
ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள குல்திபாலி கிராமத்தில், மே 25, 2025 அன்று ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் ஒரு குழுவினரால் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாக வெளியான ஊடக அறிக்கையை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கிராமத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்திற்கு அவர் சென்றபோது, திடீரென அவர் குற்றவாளிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது தொடர்பாக மக்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பாதிக்கப்பட்டவரின் கால்களும் கைகளும் கட்டப்பட்டு, கிராமத்தின் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு அவர் தாக்கப்பட்டார்.
செய்தி அறிக்கையின் உள்ளடக்கம், உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்ட செய்தியாளரின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான கடுமையான பிரச்சினை எழுகிறது என்பதை ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, ஒடிசா காவல்துறை தலைமை இயக்குநருக்கு இரண்டு வாரங்களுக்குள் இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மே 26, 2025 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவரின் செல்பேசிகள் மற்றும் வீடியோ கேமராவையும் குற்றவாளிகள் அடித்து நொறுக்கினர். மேலும் சம்பவம் அல்லது நடந்து வரும் கட்டுமானப் பணிகள் குறித்து யாரிடமும் எதையும் தெரிவிக்கக் கூடாது என்று அவர் மிரட்டப்பட்டதாகவும் ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132791
****
(Release ID: 2132791)
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2132922)
வருகையாளர் எண்ணிக்கை : 15