நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏப்ரல் 2025 (நிதியாண்டு 2025-26)க்கான இந்திய அரசின் பொதுத்துறை கணக்குகளின் மாதாந்திர ஆய்வு

Posted On: 30 MAY 2025 6:22PM by PIB Chennai

2025 ஏப்ரல் மாதத்திற்கான இந்திய அரசின் மாதாந்திர கணக்குகள்  தொகுக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-

 

மத்திய அரசின் வருவாய் ரூ. 2,79,288 கோடியாக உள்ளது.  (2025-26 பட்ஜெட் மதிப்பீட்டில் இது 8.0 சதவீதமாக உள்ளது.) கடன்களை வசூலிப்பதற்காக இதில் ரூ.1,89,669 கோடி வரி வருவாயாகவும்  (மத்திய அரசின் நிகர பங்கு தொகை), ரூ.67,160 கோடி வரி அல்லாத வருவாயாகவும்  ரூ.22,459 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயும் அடங்கும். மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு ரூ.81,735 கோடி பிரித்துவழங்கப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.11,860 கோடி கூடுதலாகும்.

மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.4,65,620 கோடியாகும்.  (இது 2025-26 பட்ஜெட் மதிப்பீட்டில் 9.2% ஆகும்) இதில் ரூ.3,05,830 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.1,59,790 கோடி மூலதனக் கணக்கிலும் அடங்கும். மொத்த வருவாயின செலவினங்களில் ரூ.93,460 கோடி கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையாகும். ரூ.28,955 கோடி முக்கிய திட்டங்களுக்கான மானியத் தொகையாக உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132828

 

****

(Release ID: 2132828)

AD/RB/DL


(Release ID: 2132898)
Read this release in: English , Urdu , Marathi , Hindi