தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேசத்தின் கலா அம்பில் 30 படுக்கைகள் கொண்ட புதிதாகக் கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை டாக்டர் மன்சுக் மண்டாவியா 2025 மே 31 அன்று திறந்து வைக்கிறார்

प्रविष्टि तिथि: 29 MAY 2025 5:19PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌரில் உள்ள கலா அம்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா, 2025 மே 31 அன்று திறந்து வைக்கிறார். 100 படுக்கைகள் வரை மேம்படுத்தக்கூடிய அளவிலான இந்த நவீன மருத்துவ வசதி, இப்பகுதியில் இஎஸ்ஐ  திட்டத்தின் கீழ் ஊழியர்களின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும்.

ஒரு சிறப்பு அடையாளமாக, மருத்துவமனை கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்களையும் டாக்டர் மண்டாவியா கௌரவிக்கவுள்ளார்.

சுமார் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த நவீன மருத்துவமனையானது சிர்மௌர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளுக்கான அணுகலை வழங்கும் வகையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2132375

***

AD/TS/IR/AG/RR/DL


(रिलीज़ आईडी: 2132441) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati