குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

போரிடத் தயார் நிலையில் இருக்கும்போது அமைதி பாதுகாக்கப்படுகிறது - குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 27 MAY 2025 2:50PM by PIB Chennai

“நாட்டின் பாதுகாப்பிற்கு, வலுவான உள்நாட்டுப் பாதுகாப்பு அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். வலிமையான நிலையில் இருந்து கொண்டு போரைத் தவிர்ப்பது உகந்த செயல் என்று அவர் கூறினார். நீங்கள் எப்போதும் போரிடத் தயார் நிலையில் இருக்கும்போது அமைதி பாதுகாக்கப்படுகிறது…. தொழில்நுட்ப வலிமை, வழக்கமான ஆயுத வலிமையைத் தவிர, மக்களிடமிருந்தும் வலிமை கிடைக்கிறது என்று தெரிவித்தார்.”

 

குடிமக்கள் தங்கள் கடமைகளை சரிவர மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், “சமநிலை பராமரிக்கப்பட வேண்டும் என்றால், நாம் எதையும் தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார். அடிப்படை உரிமைகளை இருபத்தி நான்கு மணி நேரமும் கோரி வருவதன் மூலம், அடிப்படைக் கடமைகளை முற்றிலும் மறந்துவிடுவோம்!… நாம் நமது உரிமைகளில் மட்டுமே கவனம் செலுத்தி கடமைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால், மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், பழமையான, மிகவும் செயல்பாட்டுடன் கூடிய ஒரு குடிமகனின் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறினார். நாம் ஒவ்வொருவருக்கும் 11 அடிப்படைக் கடமைகள் உள்ளன. இந்தக் கடமைகள் தொடக்க காலங்களில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள், ஒவ்வொரு குடிமகனும் தனது கடமைகளை மதித்து வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் அது குறித்த அம்சங்கள் அதில் இடம்பெறவில்லை என்ற உண்மையை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். அத்தகையக் கடமைகளை நாம் மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  ஆனால், குறிப்பாக மக்கள் இவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்களை எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகிறது என்று அவர் தெரிவித்தார். இவை அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தம் மற்றும் 86-வது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன என்றார். அடிப்படைக் கடமைகள் குறித்த உணர்வை ஏற்படுத்த வேண்டுமானால், அது நாட்டின் நலவாழ்வை முன்னிலைப்படுத்துவதாகும். பொது விவாதம், பொது ஒழுங்கு, பொது ஒழுக்கம், சுற்றுச்சூழல், அனைவருக்கும் வாழ்க்கையில் நன்மை என அனைத்திற்கும் உகந்த முறையில் பங்காற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.”

 

சில நேரங்களில் மக்கள் நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்று யோசிக்கிறார்கள் சுதேசி என்பது பொருளாதார தேசியவாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்றும், பொருளாதார தேசியவாதம் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் சுதேசி என்பதன் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பதை நாம் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், இது நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டு மக்களை ஊக்குவிக்கும் என்றார். ஆனால், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அல்லது உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கினால், உடனடியாக மூன்று பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார். ஒன்று, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும் நிலை ஏற்படும் என்றும், இது பில்லியன் கணக்கான டாலர்களில் உள்ளது என்றும் தெரிவித்தார். இரண்டாவதாக, இந்த நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்யும்போது, நமது நாட்டின் சொந்த மக்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை பறிக்கும் நிலை உருவாகும்.  நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையை ஏற்படுத்துகிறோம் என்று கூறினார். மூன்றாவதாக, மிக முக்கியமாக, நாம் தொழில்முனைவோரின் சிந்தனைகளைத் தடுப்பதாக இருக்கும் என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131592

----

AD/TS/SV/KPG/RJ


(Release ID: 2131717) Visitor Counter : 2