பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்

தாஹோதில் சுமார் ரூ. 24,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

புஜ் பகுதியில் ரூ. 53,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

குஜராத் நகர்ப்புற வளர்ச்சி வரலாற்றின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்

Posted On: 25 MAY 2025 9:14AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர் தாஹோத் நகருக்குச் சென்று காலை 11:15 மணியளவில், ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மின்சார ரயில் என்ஜின் ஒன்றையும் கொடியசைத்துத் தொடங்கிவைப்பார். பின்னர், தாஹோதில் சுமார் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுவார்.

பிற்பகல்  மாலை 4 மணியளவில் புஜ் நகருக்கு செல்லும் பிரதமர் , அங்கு ரூ.53,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். ஒரு பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுவார்.

மே 27 அன்று  காலை 11 மணியளவில் காந்திநகருக்குச் செல்லும் பிரதமர், குஜராத் நகர்ப்புற வளர்ச்சி வரலாற்றின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்று நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டு 2025-ஐத் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

உலகத்தரம் வாய்ந்த பயண உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இணைப்பை மேம்படுத்துவதற்கும் தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, தாஹோதில் இந்திய ரயில்வேயின் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையைப் பிரதமர்  திறந்து வைப்பார். இந்தத்  தொழிற்சாலை உள்நாட்டு நோக்கங்களுக்காகவும் ஏற்றுமதிக்காகவும் 9000 குதிரைத்திறன் கொண்ட மின்சார ரயில் என்ஜின்களை உற்பத்தி செய்யும். இந்தத்  தொழிற்சாலையிலிருந்து தயாரிக்கப்படும் முதல் மின்சார ரயில் என்ஜினையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். இந்திய ரயில்வேயின் சரக்கு ஏற்றுதல் திறனை அதிகரிக்க இந்த ரயில் என்ஜின்கள் உதவும். இந்த ரயில் என்ஜின்கள் மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் அமைப்புகளைக் கொண்டிருக்கும். மேலும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் வகையில் எரிசக்திப் பயன்பாட்டைக் குறைப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதன்பின், தாஹோதில் ரூ.24,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பிரதமர்  அடிக்கல்  நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இவற்றில்  ரயில்வே  திட்டங்கள் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு திட்டங்கள் அடங்கும். வேராவல் - அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலையும், வல்சாத் - தாஹோத் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். பாதை மாற்றப்பட்ட கட்டோசன்-கலோல் பிரிவையும் பிரதமர் திறந்து வைப்பதோடு, அதில் ஒரு சரக்கு ரயிலையும் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்.

புஜ் பகுதியில் ரூ.53,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்குப்  பிரதமர் அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். காவ்டா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வெளியே அனுப்புவதற்கான மின்மாற்றித் திட்டங்கள், மின்மாற்றி வலையமைப்பு விரிவாக்கம், டாபியில் உள்ள அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலைய அலகு உள்ளிட்ட மின் துறையின் திட்டங்களும், காண்ட்லா துறைமுகத் திட்டங்கள், குஜராத் அரசின் சாலை, நீர் மற்றும் சூரிய மின்சக்தித்  திட்டங்களும்  இவற்றில் அடங்கும்.

குஜராத்தில் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டு 2005 என்பது, திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு, சிறந்த நிர்வாகம், நகரவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மூலம் குஜராத்தின் நகர்ப்புறத் தோற்றத்தை மாற்றும் நோக்கத்துடன்  திரு நரேந்திர மோடியால் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட ஒரு முதன்மை முயற்சியாகும். 2005-ம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், குஜராத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மாநில தூய்மையான காற்றுத் திட்டம் ஆகியவற்றுடன் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டு 2025 - பிரதமர் காந்திநகரில் தொடங்கி வைப்பார். நகர்ப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் தொடர்பான பல திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 22,000-க்கும் அதிகமான குடியிருப்பு அலகுகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பொன்விழா முதலமைச்சர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,300 கோடி நிதியை அவர் விடுவிப்பார்.

****

(Release ID: 2131060)

TS/SMB/SG

 


(Release ID: 2131105)