மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II), 2024 இன் இறுதி முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

Posted On: 23 MAY 2025 6:17PM by PIB Chennai

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II), 2024 இன் முடிவுகளின் அடிப்படையில் இறுதியாக தகுதி பெற்ற 574 (*510 + ^64) வேட்பாளர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் கீழ் வரும் பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்: (i) *சென்னை அதிகாரிகள் பயிற்சி நிறுவனம், 122வது குறுகிய சேவை ஆணைய பாட வகுப்பு (என்டி) (யுபிஎஸ்சி) (ஆண்களுக்கானது) மற்றும் (ii) ^சென்னை அதிகாரிகள் பயிற்சி நிறுவனம், 36வது குறுகிய சேவை ஆணைய பெண்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (யுபிஎஸ்சி) பாட வகுப்பு, அக்டோபர், 2025 இல் தொடங்குகிறது. 122வது குறுகிய சேவை ஆணைய பாட வகுப்பு (என்டி) (யுபிஎஸ்சி) (ஆண்களுக்கானது) பட்டியலில், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரளாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமி (முன்-பறக்கும்) பயிற்சி பாட வகுப்பு(கள்) ஆகியவற்றில் சேர்வதற்கான அதே தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களும் அடங்கும்.

 

(I) 122வது குறுகிய சேவை ஆணைய பாட வகுப்பு (என்டி) (யுபிஎஸ்சி) (ஆண்களுக்கானது) 276 காலியிடங்களும் (II) 36வது குறுகிய சேவை ஆணைய பெண்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (யுபிஎஸ்சி) பாட வகுப்புக்கு 19 காலியிடங்களும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

தகுதிப் பட்டியலைத் தயாரிப்பதில் தேர்வர்களின் மருத்துவத் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அனைத்துத் தேர்வர்களின் வேட்புமனுவும் தற்காலிகமானது. இந்தத் தேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் கல்வித் தகுதி சரிபார்ப்பு, ராணுவத் தலைமையகத்தால் செய்யப்படும்.

 

தேர்வர்கள் http://www.upsc.gov.in  என்ற வலைத்தளத்தை அணுகுவதன் மூலமும் முடிவுகள் குறித்த தகவல்களைப் பெறலாம். இருப்பினும், இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் தேர்வர்களின் மதிப்பெண்கள் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும், மேலும் 30 நாட்களுக்குக் கிடைக்கும்.

 

விண்ணப்பதாரர்கள், தங்கள் தேர்வு தொடர்பான ஏதேனும் தகவல்களையோ விளக்கங்களையோ, வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ (011-23385271, 011-23381125 மற்றும் 011-23098543) தொடர்பு கொள்ளலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130800

 

***

 

(Release ID: 2130800)

SG/RB/DL


(Release ID: 2130907)
Read this release in: English , Urdu , Marathi , Hindi