வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15-வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் - பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தல்

Posted On: 23 MAY 2025 5:30PM by PIB Chennai

15-வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் மே 21, 2025 அன்று பிரேசில் தலைமையின் கீழ், "உள்ளடக்கிய, நிலையான நிர்வாகத்திற்கு உலகளாவிய தென் பகுதி நாடுகள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்" என்ற கருப்பொருளில் நடைபெற்றது. பிரிக்ஸ் உறுப்பினர்களிடையே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்துவதற்காக இந்தியா இந்தத் தளத்தைப் பயன்படுத்திக் கொண்டது.  2026-ம் ஆண்டில் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க இந்தியா தயாராகி வரும் நிலையில், முக்கியமான வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிரேசில் தலைமையின் தீர்வு சார்ந்த அணுகுமுறையைப் பாராட்டியது.

கூட்டத்தின் முக்கிய விளைவாக, கீழ்கண்ட மூன்று கூட்டுப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:

•     உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம், பலதரப்பு வர்த்தக அமைப்பை வலுப்படுத்துதல் குறித்த பிரிக்ஸ் பிரகடனம்

•     பிரிக்ஸ் தரவு பொருளாதார ஆளுகை

•     பிரிக்ஸ் வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சி கட்டமைப்பு

இவை  சமமான, உள்ளடக்கிய, விதிகள் சார்ந்த உலகளாவிய வர்த்தகத்திற்கான பிரிக்ஸின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கின்றன.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் சார்பாக வழங்கப்பட்ட உரையில், ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் பிரேசிலின் முயற்சிகளுக்கு இந்தியாவின் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. 2025-ல் புதிய பிரிக்ஸ் உறுப்பினராக இந்தோனேசியா சேர்க்கப்பட்டதை இந்தியா வரவேற்றது. உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம் என்ற தலைப்பில், நீண்டகால வளர்ச்சிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் அவசியத்தை இந்தியா எடுத்துரைத்தது,

***

(Release ID: 2130774)

SG/TS/PLM/RR/DL


(Release ID: 2130834)