பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் நடைபெற்றது

Posted On: 23 MAY 2025 6:16PM by PIB Chennai

ஹரியானா மாநிலம் மானேசரில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டம் அத்துறைக்கான மத்திய அமைச்சர்  திரு ஹர்தீப் சிங் பூரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மலிவு விலையில் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்தல் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். எரிபொருள் விலைகளை நிலைப்படுத்துதல், சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரித்தல், நாடு முழுவதும் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத் திறனை விரிவுபடுத்துதல் போன்ற மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட எரிசக்தி கொள்கைகளுக்கான தனது அமைச்சகத்தின் உறுதிப்பாட்டையும் திரு ஹர்தீப் சிங் பூரி மீண்டும் வலியுறுத்தினார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபியும் 27 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். மலிவு விலையில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்தல், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரித்தல், பிராந்திய உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130798

***

(Release ID: 2130798)

SG/TS/SV/KPG/DL


(Release ID: 2130833)