எரிசக்தி அமைச்சகம்
தென் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் பிராந்திய அளவிலான மின் உற்பத்தித் திறன் கருத்தரங்கம்
Posted On:
23 MAY 2025 5:19PM by PIB Chennai
நாட்டின் தென் பகுதியில் உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான கருத்தரங்கம் பெங்களூருவில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில், மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக், கர்நாடக எரிசக்தித் துறை அமைச்சர் திரு கே.ஜே. ஜார்ஜ், தெலங்கானா துணை முதலமைச்சரும் எரிசக்தித் துறை அமைச்சருமான திரு பட்டி விக்ரமார்க்க மல்லு, தமிழ்நாடு மின் துறை அமைச்சர் திரு எஸ்.எஸ். சிவசங்கர், புதுச்சேரி மின்சாரத் துறை அமைச்சர் திரு ஏ. நமசிவாயம், ஆந்திரப்பிரதேச மின்துறை அமைச்சர் திரு கோட்டிபதி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்கால மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 2035-ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் தேவையான மின் உற்பத்தி திறனுக்கான இணைப்புகளை உறுதி செய்வதன் அவசியம் குறித்தும் மத்திய மின்சாரத்துறை செயலர் விரிவாக எடுத்துரைத்தார். கட்டண அடிப்படையிலான ஏலம், ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டண வழிமுறை, பட்ஜெட் ஒதுக்கீடு அல்லது ஏற்கனவே உள்ள சொத்துக்களை விற்று பணமாக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிசார் நடவடிக்கைகள் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத் திறன்களை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், சைபர் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு எதிரான மின் பரிமாற்ற அல்லது மின் விநியோக கட்டமைப்புகள் உள்ளிட்ட மின் துறை உள்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்பதற்கு மாநிலங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதற்குத் தேவையான சைபர் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கூடுதலாக, மின் விநியோக பயன்பாடுகளின் நிதிசார் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் மாநிலங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130769
***
SG/TS/SV/KPG/DL
(Release ID: 2130769)
(Release ID: 2130829)