வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
உள்ளடக்கிய நிர்வாகத்தை நோக்கி மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை
Posted On:
22 MAY 2025 4:34PM by PIB Chennai
பிரதமரின் 'அனைவருக்காகவும், அனைவரின் வளர்ச்சி' என்ற தொலைநோக்குப் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்று, சுகம்ய பாரத் இயக்கத்தின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்குவதற்கான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், உள்ளடக்கிய நிர்வாகத்தை நோக்கிய முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், உள்ளடக்கிய நிர்வாகத்தைக் கருத்தில் கொண்டு முக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 உடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசு குடியிருப்பு விடுதிகளுக்கு நியாயமான அணுகலை உறுதி செய்வதற்காக அலுவலக குறிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் வீட்டுவசதிக்கான ஒதுக்கீட்டில் 4% இடஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். இது பொது சேவைகளில் சமத்துவம், கண்ணியம், பயன்கள் கிடைப்பது குறித்த கணிசமான முன்னேற்றத்தைக் குறிப்பதாக உள்ளது.
இந்த முயற்சி நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரமளிப்பதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பு உணர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்த உதவிடுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130515
******
AD/SM/SV/KPG/KR
(Release ID: 2130561)