வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜகார்த்தாவில் நடைபெறும் 67வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது

Posted On: 21 MAY 2025 5:00PM by PIB Chennai

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மே 20–22, 2025 அன்று நடைபெறும் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (ஏபிஓ) நிர்வாகக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தின் 67வது அமர்வின் போது, 2025–26 காலத்திற்கான ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின்(ஏ.பி.ஓ.) தலைமைப் பொறுப்பை இந்தியா முறையாக ஏற்றுக்கொண்டது. இந்தியக் குழுவிற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளர் மற்றும் இந்தியாவுக்கான ஏபிஓ இயக்குநர் ஸ்ரீ அமர்தீப் சிங் பாட்டியா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

ஏபிஓ-வின் தலைவராக,  தொலைநோக்கு 2030- ஐ முன்னெடுப்பதற்கும் பசுமை உற்பத்தித்திறன் 2.0 கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. டிஜிட்டல் மாற்றம், நிலைத்தன்மை, புதுமை மற்றும் தொழில்முனைவோரை இயக்குவதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தியது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் உற்பத்தித்திறன் மற்றும் மேம்பாட்டு சவால்களை நிவர்த்தி செய்யும் உள்ளடக்கிய, பதிலளிக்கக்கூடிய மற்றும் முடிவு சார்ந்த திட்டங்களுக்கு பங்களிக்கும் நோக்கத்தையும் அது வெளிப்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும், டிபிஐஐடி-யின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில்  மூலம் ஏபிஓ தலைமையிலான திறன் மேம்பாட்டு முயற்சிகளில் 100 -க்கும் மேற்பட்ட இந்திய வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். இந்தத் திட்டங்கள் இந்தியாவின் தொழில்துறை, சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளில் உற்பத்தித்திறன் மேம்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. எம்எஸ்எம்இ-களுக்கான பசுமை உற்பத்தித்திறன் மற்றும் தொழில் 4.0 பயன்பாடுகளில் கவனம் செலுத்தும் திட்டங்கள் உட்பட பல செயல் விளக்கத் திட்டங்களும் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாகக் குழுவானது ஏபிஓ-வின் மிக உச்ச நிலை முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டதாகும்.  அமைப்பின் உத்திசார் திசையை அமைக்கவும், முக்கிய திட்டங்களை அங்கீகரிக்கவும், செயலக செயல்திறனை ஆய்வு செய்யவும் ஆண்டுதோறும் கூடுகிறது. 67வது அமர்வு இந்தோனேசியா அரசால் நடத்தப்படுகிறது.

1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு, டோக்கியோவை தளமாகக் கொண்ட  அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும், இது பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாடு மூலம் ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் உற்பத்தித்திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. ஏபிஓ தற்போது வங்கதேசம், கம்போடியா, தைவான், பிஜி, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், கொரிய குடியரசு, லாவோ , மலேசியா, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, துருக்கி, வியட்நாம் உள்ளிட்ட 21 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாக, அமைப்பின் தொலைநோக்கு பார்வையை வடிவமைப்பதிலும் அதன் முயற்சிகளை ஆதரிப்பதிலும் இந்தியா முக்கியப் பங்கு வகித்துள்ளது.

----

(Release ID 2130267)

TS/PKV/KPG/DL

 


(Release ID: 2130339)
Read this release in: English , Urdu , Marathi , Hindi