பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அரச பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சிக்கான கர்மயோகி இணையதளத்தில் 1 கோடி பணியாளர்கள் பதிவு செய்துள்ளதன் மூலம் சாதனை படைக்கப்பட்டுள்ளது
Posted On:
21 MAY 2025 1:23PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்; அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அரசின் குடிமைப் பணி திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான தேசிய திட்டமான கர்மயோகி இயக்கம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கர்மயோகி திட்டம் மத்திய அரசால் வடிவமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் டிஜிட்டல் கற்றல் தளமான ஐஜிஓடி கர்மயோகி தளத்தில், நாடு முழுவதிலும் இருந்து பதிவு செய்துள்ள அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இது 2023 - ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 லட்சம் பயனர்களுடன் தொடங்கிய இந்த இணையதளம் 2 ஆண்டுகளில் 30 மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த விரைவான வளர்ச்சி, பொது நிர்வாகத்தில் அதிகரித்து வரும் டிஜிட்டல் நடைமுறைகளின் செயல்பாடுகளை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மேலும், எதிர்காலத்தில் சேவையாற்றத் தயாராக உள்ள குடிமக்களை மையமாகக் கொண்ட குடிமைப் பணி சேவையை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலிறுத்துவதாகவும் உள்ளது.
தள மேம்பாடு மற்றும் கற்றலுக்கான சூழல் அமைப்பு
மத்திய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுப் பணியாளர்களின் தீவிர பங்கேற்பு ஆகியன இந்த வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளன. அரசுப் பாணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக்கான கர்மயோகி தளத்தில் பதிவுசெய்துள்ள பணியாளர்களில் 60% - த்திற்கும் அதிகமானோர் 36 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சியுள்ள பணியாளர்கள், மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு இந்த இணையதளத்தை கொண்டு செல்வதிலும், மாநில அளவிலான நிர்வாக கட்டமைப்புகளுடன் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பையும் இது நிரூபிக்கிறது. இதுவரை இந்த தளத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிவுசெய்யப்பட்ட குடிமைப் பணியாளர்களைக் கொண்ட முதல் 5 மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை உள்ளன. இதுவரை, 3.8 கோடிக்கும் அதிகமான கற்றல் நேரங்களை உள்ளடக்கிய பாடநெறி முடிவின் அடிப்படையில் அரசுப் பணியாளர்களுக்கு 3.1 கோடிக்கும் அதிகமான கற்றல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று, ஐஜிஓடிஎனப்படும் கர்மயோகி தளமானது மத்திய, மாநில அரசுகளின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள், குடிமைப் பணி சேவைக்கான பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், முதன்மையான இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் வல்லுநர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட பாடநெறி வழங்குநர்களால் பங்களிக்கப்பட்ட 16 மொழிகளில் 2,400-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது. அனைத்து படிப்புகளும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கர்மயோகி திறன் மாதிரிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன - இது இந்திய ஞானம் மற்றும் மிஷன் கர்மயோகி இயக்கத்தின் கோட்பாடுகளில் வேரூன்றியுள்ளது.
தேசிய மற்றும் மாநில அளவிலான திறன் மேம்பாட்டு முன் முயற்சிகள்
இந்த தளத்தின் வளர்ச்சிக்கான முக்கிய உத்வேகம் தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட கற்றல் வாரங்களாகும். முதல் கர்மயோகி கற்றல் வாரம் (தேசிய கற்றல் வாரம்) 2024 - ம் ஆண்டு அக்டோபர் 19 - ம் தேதி முதல் 27 - ம் டதேதி வரை நடைபெற்றது. இதில் 32 லட்சத்திற்கும் அதிகமான பாடநெறி வகுப்புகள் நிறைவு செய்யப்பட்டன மற்றும் 38 லட்சத்திற்கும் அதிகமான மணி நேரம் கற்றலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தியப் பிரதமரால் தொடங்கி வைக்ஙப்பட்ட இந்த நிகழ்வானது வளர்ச்சியடைந்த இந்தியா @2047 என்ற பாதையில் முன்னோக்குப் பார்வை கொண்டதாக உள்ளது. இந்தியாவின் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் செயலாக்கமாகவும் பொறுப்புடைமையைசரியாக நிறைவேற்றும் குடிமைப் பணிச் சேவையை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் httpswww.pib.gov.inPressReleasePage.aspxPRID=2130180
---
(Release ID 2130180)
TS/SV/KPG/KR
(Release ID: 2130252)