தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 14.58 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது
Posted On:
21 MAY 2025 11:59AM by PIB Chennai
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் 14.58 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வரும் பகுப்பாய்வு தொடர்பான தரவுகளை 2024 - ம் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடும்போது நிகர சம்பளப் பட்டியல் சேர்க்கை 1.15% அதிகரித்துள்ளது. இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் பயனுள்ள தொடர் முயற்சிகளால் வலுவான கூடுதல் வேலை வாய்ப்புகள் மற்றும் பணியாளர் நலன்கள் குறித்த விழிப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள சம்பளப்பட்டியலில் உள்ள தரவுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
புதிய சந்தாதாரர்கள்:
2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுமார் 7.54 லட்சம் புதிய சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இது 2025 - ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 2.03% அதிகரிப்பையும், 2024 - ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட 0.98% வளர்ச்சியைக் குறிப்பதாக உள்ளது. புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதற்கு அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள், தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறித்த கூடுதல் விழிப்புணர்வு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிறுவனத்தின் வெற்றிகரமான தொடர்த் திட்டங்கள் ஆகியவை காரணிகளாக இருக்கலாம்.
18-25 வயதுடையவர்கள் சம்பளப் பட்டியலில் முன்னணியில் உள்ளனர்:
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் குறிப்பிடத்தக்க அம்சமாக 18-25 வயதுடைய பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆகும். 18-25 வயதுடைய பிரிவில் 4.45 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது 2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய சந்தாதாரர்களில் 58.94% ஆகும். இந்த மாதத்தில் சேர்க்கப்பட்ட 18-25 வயதுப் பிரிவினரின் புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கையை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 4.21% உயர்வு ஏற்பட்டுள்ளது. இது 2024 - ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முந்தைய ஆண்டை விட 4.73% கூடுதலாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130161
******
TS/SV/KPG/KR
(Release ID: 2130209)