வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
திரிபுராவில் உள்ள கமல்பூர் நகர் பஞ்சாயத்து, மக்கும் பைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தூய்மைப் பணியில் நிலைத்தன்மையை நோக்கி பெரும் அடியை எடுத்து வைத்துள்ளது.
திருச்சி மாநகராட்சியில் பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை
Posted On:
21 MAY 2025 11:03AM by PIB Chennai
நகர்ப்புற நிலப்பரப்புகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து குவிந்து வருவதால், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், புதுமையான தலையீடுகள் சவாலை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் - அதை ஒரு வாய்ப்பாக மாற்றுகின்றன. பிளாஸ்டிக் இல்லாத மாற்றுகளுக்கு வழி வகுக்கும் வகையில் நகர்ப்புற இந்தியா தொழில்நுட்பம், குடிமக்கள் பங்கேற்பு மற்றும் வட்டச் சுழல் பொருளாதார மாதிரிகளை ஏற்றுக்கொள்கிறது.
ஒரு காலத்தில் வசதியின் அடையாளமாக இருந்த பிளாஸ்டிக், இப்போது ஒரு பெரிய சுற்றுச்சூழல் அபாயக் காரணியாக உள்ளது. நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் ஆர்ஆர்ஆர் மாதிரியின் கீழ் மறுசுழற்சி, மறுபயன்பாடு மற்றும் மீட்பு - வட்டப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் போன்ற புதுமையான தீர்வுகள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளைச் சமாளிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நிலையான, பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்க உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் குடிமக்கள் ஈடுபாட்டை இணைத்து வருகின்றன. அடிமட்ட மாற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இது உதவுகிறது.
திரிபுராவில் உள்ள கமல்பூர் நகர் பஞ்சாயத்து, மக்கும் தன்மை கொண்ட, ரசாயனம் இல்லாத பாலிமரான பிபாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட மக்கும் பைகளை, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அறிமுகப்படுத்துவதன் மூலம் நிலைத்தன்மையை நோக்கி ஒரு பெரும் அடியை எடுத்து வைத்துள்ளது. மக்கும் தன்மைக்கான தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிப்பெட் - டால் சான்றளிக்கப்பட்ட இந்தச் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள் 180 நாட்களுக்குள் சிதைந்து, வழக்கமான பிளாஸ்டிக்குகளுக்கு ஒரு நடைமுறை மாற்றாக விளங்குகின்றன. ரூ 145/கிலோ என்ற மொத்த விலை மற்றும் ரூ 160/கிலோ என்ற சில்லறை விலையில் இவை மலிவாகக் கிடைக்கின்றன. மக்கும் பைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், நிலையான எதிர்காலத்திற்காக பொறுப்பான கழிவு மேலாண்மையை ஊக்குவிப்பதற்கும் அவர்கள் சமூகத்துடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தடை இருந்தபோதிலும் சந்தைகளில் தொடர்ச்சியான ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டைச் சமாளிக்க, திருச்சி மாநகராட்சி, ஜி.ஐ.எஸ். இந்தியாவின் சுழல்வட்டக் கழிவு தீர்வுகள் திட்டத்துடன், 2022 -ல் ஒரு இலக்கு பிரச்சாரத்தைத் தொடங்கியது. தென்னூர், கே.கே. நகர் மற்றும் உறையூரில் உள்ள 220 விற்பனையாளர்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட உழவர் சந்தைகள் தீவிர ஈடுபாட்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. விற்பனையாளர்களுக்கு பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நிலையான மாற்று வழிகளை பின்பற்ற ஊக்குவிக்கப்பட்டது. "துணிப்பை திருவிழா" முயற்சி, வாங்குபவர்களிடையே மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப் பைகளை பயன்படுத்துவதற்கு ஊக்கமளித்தது. தென்னூர் உழவர் சந்தை ஒரு வருடத்தில் 2,200 கிலோ பிளாஸ்டிக் கே.கே. நகர் நான்கு மாதங்களில் 620 கிலோவையும், உறையூர் ஆறு மாதங்களில் 300 கிலோ பிளாஸ்டிக்குகளையும் தவிர்த்தன.
மே 2022 இல் கேதார்நாத்தில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் வைப்புத்தொகை திரும்பப்பெறுதல், நிதி ஊக்கத்தொகைகள் ஆகியவற்றின் மூலம் பொறுப்பான அகற்றலை ஊக்குவிப்பதன் மூலம் சார்தாம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சமாளிக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பல்லடுக்கு பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களை வாங்குபவர்கள் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையாக ரூபாய் 10 செலுத்துகிறார்கள், பதிவுசெய்யப்பட்ட கடைகளுக்கு விநியோகிக்கப்படும் கியூஆர் குறியீடுகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களில் விரிவுபடுத்தப்பட்ட இந்த முயற்சி, 20 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்துள்ளது.
அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சமாளிக்க, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பால் பைகளைத் திரும்பப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக ஒரு திரும்பப் பெறுதல் முயற்சி தொடங்கப்பட்டது. பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மறுசுழற்சி மற்றும் பொறுப்பான கழிவுகளை அகற்றுவதை ஊக்குவித்தன. இவை நிலைத்தன்மையின் கலாச்சாரத்தை வளர்த்தன. சமூகப் பங்கேற்பு வலுப்படுத்தப்பட்டது, நீண்டகால சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அடிமட்ட நிலையான நடைமுறைகளை வளர்த்தது. கட்டமைக்கப்பட்ட மீண்டும் வாங்குதல் அமைப்பு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வருவாயை ஈட்டியது, அதே நேரத்தில் பொறுப்பான கழிவு மேலாண்மைக்கான பொருளாதார ஊக்கத்தொகைகளையும் வழங்கியது. நவம்பர் 2024 வாக்கில், 17,600 பால் பைகள் சேகரிக்கப்பட்டு, குடியிருப்பாளர்களுக்கு 352 லிட்டர் பால் வெகுமதியாக வழங்கப்பட்டது.
பாட்டியாலாவில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி வசதி , பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. பல்லடுக்கு பிளாஸ்டிக்குகளை வெப்ப மற்றும் குளிர் அழுத்தும் தொழில்நுட்பத்தின் மூலம் நீடித்த சிப் பலகைகளாக மாற்றுவதன் மூலம் குறைந்த மதிப்புள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தவிர்க்கப்படுகிறது. ஒட்டு பலகைக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றான இந்த சிப்போர்டுகள், தளபாடங்கள், கூரை மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மறுசுழற்சி செயல்முறையில் கழிவுகளை வரிசைப்படுத்துதல், சுத்தம் செய்தல், துண்டாக்குதல் ஆகியவை அடங்கும், அவை ஒருங்கிணைந்த, நீர் மற்றும் கரையான்-எதிர்ப்பு பலகைகளை உருவாக்க பிணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை ஒரு கூட்டு, பல பங்குதாரர் முயற்சியாக மாறி வருகிறது. மாநிலங்கள், நகரங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மக்கள் அளவிடக்கூடிய தீர்வுகளை இயக்கி வருகின்றன. மக்கள், நிலையான நடைமுறைகளுக்கு மாறுகிறார்கள். இதன் மூலம் ஒரு வட்டப் பொருளாதாரத்தை ஆதரிக்க மறுசுழற்சியை வலுப்படுத்துகிறார்கள்.
***
(Release ID: 2130150)
TS/PKV/AG/KR
(Release ID: 2130176)