நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உலக அளவியல் தினம் 2025 அன்று மத்திய நுகர்வோர் நலத்துறை மெட்ரே ஒப்பந்தத்தின் 150-வது ஆண்டினைக் கொண்டாடியது
Posted On:
20 MAY 2025 4:51PM by PIB Chennai
1875 மே 20 அன்று பாரீசில் வரலாற்றுச் சிறப்புமிக்க மெட்ரே ஒப்பந்தம் கையெழுத்தான 150-வது ஆண்டினை குறிக்கும் வகையில், உலக அளவியல் தினம் 2025 இன்று மத்திய நுகர்வோர் நலத்துறையால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, உலகத் தரங்களுக்கு இணையாக இந்திய தரங்களை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்புக்கு இணங்க பொருளாதார வளர்ச்சிக்கும், நுகர்வோர் நம்பிக்கைக்கும் தூணாக விளங்கும் சட்டப்பூர்வ அளவியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்.
2025-ம் ஆண்டின் இந்திய நேர (ஐஎஸ்டி) நகல் விதிகளின் கீழ் ஒரே நாடு, ஒரே நேரம் என்ற முன் முயற்சியை அரசு தொடங்கியுள்ளது. ஐந்து பிராந்திய தரநிலை சோதனை கூடங்கள் மூலம் இந்திய நேரத்தை மில்லி செகண்ட் துல்லியத்துடன் வழங்குவது இந்த முன்முயற்சியின் நோக்கமாகும். இத்தகைய துல்லிய நேரம் என்பது தொலைத்தகவல் தொடர்பு, வங்கிப்பணி, போக்குவரத்து போன்ற துறைகளுக்கு முக்கியமானதாகும் என்று அவர் தெரிவித்தார்.
தங்கம், ஆபரணத்துறை போன்ற உயர்மதிப்பு பரிவர்த்தனைகளில் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு ஒரு மில்லி கிராம் துல்லியத் தன்மையுடன் தராசுகளை பயன்படுத்துவதை கட்டாயமாக்க அரசு உத்தேசித்துள்ளது என்று திரு ஜோஷி கூறினார்.
இந்த நிகழ்வில் மத்திய நுகர்வோர் நலத்துறை செயலாளர் திருமதி நிதி கரே, “அனைத்து நேரங்களுக்கும், அனைத்து மக்களுக்குமான அளவைகள்” என்பதை மையப்பொருளாதாக கொண்ட உலக அளவில் தினம் 2025-க்கான சுவரொட்டியை வெளியிட்டார்.
சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி மௌரிய பேரரசு வரை இந்தியாவின் வளமான அளவையியல் பாரம்பரியத்திற்கு இந்த விழாவில் புகழாரம் சூட்டப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129915
***
SM/SMB/AG/KR/DL
(Release ID: 2130023)