உள்துறை அமைச்சகம்
பத்ம விருதுகள்–2026-க்கான பரிந்துரைகளை 2025 ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்
प्रविष्टि तिथि:
20 MAY 2025 3:26PM by PIB Chennai
2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026-க்கான பரிந்துரைகள் 2025 மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பதற்கான கடைசி தேதி 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளத்தில் (https://awards.gov.in) மூலம் மட்டுமே பெறப்படும்.
பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதுகளில் ஒன்றாகும். 1954-ல் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. இந்த விருது 'சிறப்புப் பணிகளை' அங்கீகரிக்கிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள்/சேவைக்காக வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாத அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள். மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.
பத்ம விருதுகளை "மக்களின் பத்ம விருது" ஆக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும், சுய நியமனம் உட்பட பரிந்துரைகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்கள், சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினர், எஸ்சி & எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையைச் செய்பவர்கள் ஆகியோரிடமிருந்து அவர்களின் சிறந்து விளங்கும் மற்றும் சாதனைகள் உண்மையில் அங்கீகரிக்கப்படத் தகுதியான திறமையான நபர்களை அடையாளம் காண ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
இது தொடர்பான தகவல்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://mha.gov.in) 'விருதுகள் மற்றும் பதக்கங்கள்' என்ற தலைப்பின் கீழ் மற்றும் பத்ம விருதுகள் இணையதளத்தில் (https://padmaawards.gov.in) கிடைக்கின்றன. இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் உள்ள இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
***
(Release ID: 2129865)
SM/IR/RR/KR
(रिलीज़ आईडी: 2129909)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam