பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2025 ஏப்ரல் மாதத்திற்கான மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் செயல்பாடு குறித்த 35-வது அறிக்கை பவிஷ்யாவிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியர் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு போர்ட்டலிலும் வெளியிடப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
20 MAY 2025 12:00PM by PIB Chennai
டிஜிட்டல் அதிகாரமளித்தல் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் நலனுக்கு அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. ஓய்வூதிய அனுமதி, பரிவர்த்தனை நடைமுறை ஆகியவற்றை இணையதளம் மூலமாக கண்டறிவதற்கான பவிஷ்யா ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஆணையை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்கிறது. மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியர் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு போர்ட்டல் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்ப்பு நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருகிறது.
2025 ஏப்ரல் மாதத்திற்கான மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் செயல்பாடு குறித்த 35-வது அறிக்கையை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை பவிஷ்யாவிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியர் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பிலும் வெளியிட்டுள்ளது.
2025 ஏப்ரல் 30 நிலவரப்படி 9406 பணம் பெறுதல் மற்றும் விநியோகிக்கும் அலுவலகங்கள் மூலம் முதன்மை செயலகத்தில் உள்ள 99 அமைச்சகங்கள் / துறைகள் / உயர்நிலை அமைப்புகள் மற்றும் 1034 இணைக்கப்பட்ட அலுவலகங்களில் பவிஷ்யா செயல்பட்டு வருகிறது. செல்பேசி செயலியான இது உமாங் தளத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியர் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு இணையப்பக்கத்தில் 2025 ஏப்ரல் மாதத்தில் 8396 ஓய்வூதிய வழக்குகள் பெறப்பட்டு மொத்தம் 10,200 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பின் 5 சதவீத குறைகள் மட்டுமே தீர்வு காண நிலுவையில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129797
***
SM/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2129908)
आगंतुक पटल : 13