குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நீதிபதி வர்மா பண மீட்பு வழக்கில் பணம் வந்த வழி, அதன் மூலாதாரம், அதன் நோக்கம் பற்றி அறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர் நீதித்துறையை அது மாசுபடுத்தியுள்ளதா, மிகப்பெரிய சுறா மீன்கள் யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
Posted On:
19 MAY 2025 8:30PM by PIB Chennai
“நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. நமது நீதிபதிகள் அச்சமின்றி முடிவெடுப்பதால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் மிகவும் கடினமான வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் நிர்வாகத்தில் உள்ள, தொழில்துறையில் உள்ள அதிகாரங்களைக் கையாள்கிறார்கள். அவர்கள் பெரும் பொருளாதார வலிமையையும் நிறுவன அதிகாரத்தையும் கொண்ட வலிமையான சக்தியைக் கையாள்கிறார்கள். எனவே, நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். நாம் அதற்கான நெறிமுறையை உருவாக்க வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
பாரத் மண்டபத்தில் திரு விஜய் ஹன்சாரியாவால் தொகுக்கப்பட்ட 'நாம் ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு (கலைப்படைப்புகளுடன்)' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திரு ஜகதீப் தன்கர், "....... ஜனநாயகத்தின் உயிர்வாழ்விற்கும், ஜனநாயகம் மலர்வதற்கும் ஒரு வலுவான நீதித்துறை அமைப்பு இன்றியமையாதது" என்றார்.
ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய, குடியரசு துணைத்தலைவர், "நாம் ஓர் அதிர்ச்சியூட்டும் யதார்த்தத்தை எதிர்கொள்கிறோம். தில்லியின் லுட்யென்ஸில் ஒரு நீதிபதியின் குடியிருப்பில் எரிந்த ரூபாய் நோட்டுகள் காணப்பட்டுள்ளன. இதுவரை எந்த முதல் தகவல் அறிக்கையும் இல்லை. நாட்டில் சட்டத்தின் ஆட்சி, குற்றவியல் நீதி அமைப்பு உள்ளது. சட்டத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சட்டத்துறைக்குச் சென்றால், ஒரு கணம் கூட தாமதிக்க எந்த சந்தர்ப்பமும் இல்லை, ஏனெனில் அது சட்டத்தின் கட்டளையாகும். சட்டத்தின் ஆட்சிதான் சமூகத்தின் அடித்தளம். இந்தப் பிரச்சனையில் பணம் வந்த வழி, அதன் மூலாதாரம், அதன் நோக்கம், அது நீதித்துறையை மாசுபடுத்தியதா? பெரிய சுறாக்கள் யார் என்ற கேள்விகளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். இதுபற்றி நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன என்று அவர் தெரிவித்தார்.
வரவேற்பு நெறிமுறை தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சமீபத்திய கருத்து பற்றி குறிப்பிட்ட திரு தன்கர், "இன்று காலை மிகவும் முக்கியமான ஒன்று எனக்கு நினைவூட்டப்பட்டது, அது ஒரு நபருக்கான விஷயமல்ல. தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்னது என்னவென்றால், நாம் வரவேற்பு நெறிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதுதான். "நாட்டின் தலைமை நீதிபதியும், வரவேற்பு நெறிமுறைகளும் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவர் இதைக் குறிப்பிட்டபோது, அது அவருக்கானது மட்டுமல்ல, முதலில் அவர் வகிக்கும் பதவிக்கானது. இதை அனைவரும் மனதில் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு வகையில், நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். நீங்கள் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் குடியரசு துணைத்தலைவரின் புகைப்படத்தைப் பார்த்திருக்க மாட்டீர்கள். நான் பதவியிலிருந்து விலகும் போது, எனக்கு பின் பதவிக்கு வருவோருக்கு ஒரு புகைப்படம் இருப்பதை உறுதி செய்வேன். ஆனால் தற்போதைய தலைமை நீதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்கு நான் உண்மையில் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் வரவேற்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது அதிகாரத்துவத்தில் உள்ளவர்களுக்கு அடிப்படையானது என்று அவர் கூறினார்.
***
(Release ID: 2129736)
SM/SMB/AG/KR
(Release ID: 2129843)