சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025 ஹஜ் யாத்திரையின் முதற்கட்ட லேப்-I விமானப் புறப்பாடு நிறைவு: இந்தியா முழுவதிலிருந்து யாத்ரீகர்கள் புறப்பட்டனர்

Posted On: 19 MAY 2025 5:48PM by PIB Chennai

2025-ம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள், நாடு முழுவதும் உள்ள 18 விமான நிலையங்களிலிருந்து யாத்திரைக்காக புறப்படுகிறார்கள். ஒரு மாத காலத்திற்குள் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை அழைத்துச்  செல்லும் வசதிக்காகவும், செயல்பாடுகளை எளிதாக்குவதற்காகவும், விமானப் பயணச் சேவைகள் லேப்-I மற்றும் லேப்-II என இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டத்தின் கீழ் யாத்ரீகர்கள் புறப்பாடு 29.04.2025 அன்று முதல் அகமதாபாத், பெங்களூரு, போபால், தில்லி, கயா, குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் இருந்து தொடங்கியது.

மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு ஹஜ் யாத்ரீகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, மோடி அரசின் தடையற்ற ஆதரவை எடுத்துரைத்தார்.

எனினும், இந்தப் பகுதியில் மாறிவரும் வான்வழி போக்குவரத்து நிலைமைகள் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், 07.05.2025 முதல் ஸ்ரீநகரிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த 2025-ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான விமான சேவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

வட இந்தியாவில் விமானப் பயணம் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்ட 3,356 யாத்ரீகர்களில் 1,461 யாத்ரீகர்கள் வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றுள்ளனர். மற்ற யாத்ரீகர்களுக்கான விமானப் பயண அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும்,  இரண்டாம் கட்டம் லேப் -II விமான சேவை 31.05.2025 க்குள் தொடங்கும்.

புனித யாத்திரைக்கான முதல் கட்ட புறப்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதற்கிடையில், முதல் கட்டத்தின் இரண்டாம் நிலை புறப்பாடு 10.05.2025 அன்று தொடங்கியது அகமதாபாத், கோழிக்கோடு, சென்னை, கொச்சின், டெல்லி, ஹைதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர் ஆகிய விமான நிலையங்களில் இருந்து யாத்ரீகர்கள் புறப்படுகின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129665

•••

TS/IR/LDN/DL


(Release ID: 2129708)
Read this release in: English , Urdu , Hindi