பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சராசரியாக 19 வயதுடைய இளைய மலையேறுபவர்களைக் கொண்ட என்சிசி பயணக் குழு, எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறியது

Posted On: 18 MAY 2025 6:48PM by PIB Chennai

தேசிய மாணவர் படையின் (NCC) பயணக் குழு, மே 18, 2025 அன்று எவரெஸ்ட் சிகரத்தை (8,848 மீ) வெற்றிகரமாக ஏறியதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த குழுவில் 10 என்சிசி மாணவர்கள் (ஐந்து சிறுவர்கள் - ஐந்து சிறுமிகள்) நான்கு அதிகாரிகள், இரண்டு ஜூனியர் அதிகாரிகள், ஒரு பெண் பயிற்றுவிப்பாளர் மற்றும் 10 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

என்.சி.சி. மாணவர்கள் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதியவர்களாவார்கள். அவர்கள் கடுமையான தேர்வு மற்றும் பயிற்சி செயல்முறையை மேற்கொண்டனர். அவர்களின் தயாரிப்பின் ஒரு பகுதியாக, அவர்கள் மவுண்ட் அபி காமினில் எவரெஸ்டுக்கு முந்தைய பயணத்தை மேற்கொண்டனர். பின்னர் 15 மாணவர்களைக் கொண்ட இறுதிக் குழு சியாச்சின் அடிப்படை முகாமில் உள்ள ராணுவ மலையேறுதல் நிறுவனத்தில் குளிர்கால மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்டது. பல மாத பயிற்சிக்குப் பிறகு, பத்து என்சிசி மாணவர்கள் எவரெஸ்ட் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சராசரியாக 19 வயதுடைய இந்த இளைய குழு, அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக மாறியது. இந்தப் பயணத்தை ஏப்ரல் 03, 2025 அன்று புது தில்லியில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய பயணங்களைத் தொடர்ந்து, என்சிசி குழு எவரெஸ்ட்டில் ஏறுவது இது மூன்றாவது முறையாகும்.

*****

 

(Release ID: 2129469)

TS/PLM/SG

 


(Release ID: 2129495)
Read this release in: English , Urdu , Hindi , Marathi