இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இந்தியாவின் விளையாட்டு சூழல் சார் அமைப்பை வலுப்படுத்த கேலோ இந்தியாவின் கீழ் ஆண்டு அட்டவணையை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்
Posted On:
18 MAY 2025 5:39PM by PIB Chennai
நாடு முழுவதும் அடித்தட்டு பிரிவினர் வரை விளையாட்டு வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், கேலோ இந்தியா முன்முயற்சியின் கீழ் ஒரு விரிவான வருடாந்திர நாட்காட்டி அட்டவணையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, ஆண்டு முழுவதும் பல்வேறு துறைகளில் இளைஞர்களை ஈடுபடுத்தும் ஒரு கட்டமைக்கப்பட்ட, உள்ளடக்கிய, போட்டித்தன்மை வாய்ந்த விளையாட்டு சூழல்சார் அமைப்பை உருவாக்குவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது.
இந்த முயற்சி குறித்து இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், கேலோ இந்தியா வருடாந்திர நாட்காட்டி வெறும் அட்டவணை மட்டுமல்ல எனவும் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தியாக மாற்றுவதற்கான திட்டமாகும் என்றும் கூறினார்.
கேலோ இந்தியா கடற்கரை (பீச் கேம்ஸ்) போட்டியின் முதல் பதிப்பு, (KIBG) 2025 மே 19 முதல் 25 வரை டையூவில் நடைபெற உள்ளது. இந்த மைல்கல் நிகழ்வு கடலோர மற்றும் கடற்கரை விளையாட்டுகள்மீது தேசிய கவனத்தை ஈர்க்கும்.
மீதமுள்ள ஆண்டுக்கான நாட்காட்டியில் கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுகள் (ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை), வடகிழக்கு விளையாட்டுகள் (மே-ஜூன்), பழங்குடியினர் விளையாட்டுகள் (சத்தீஸ்கரில் செப்டம்பர்), பழங்குடி மற்றும் தற்காப்பு கலை விளையாட்டுகள் (தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஜூலை-ஆகஸ்ட்) போன்றவை இடம்பெற்றுள்ளன.
இந்த கவனமாக வடிவமைக்கப்பட்ட, அட்டவணை நாட்காட்டி கடந்த கால அனுபவங்களிலிருந்து பெறப்பட்டு, ஒட்டுமொத்த திட்டமிடல் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு ஆர்வமுள்ள மாநிலங்கள் அணுகப்படும். மேலும் பல நிகழ்வுகளை நடத்துவதை ஒழுங்குபடுத்த ஒரு பொதுவான முன்மொழிவு வழிமுறை உருவாக்கப்பட்டு வருகிறது.
******
(Release ID: 2129450)
TS/PLM/SG
(Release ID: 2129489)