பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மலேசியாவில் நடைபெறும் 17-வது சர்வதேச கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சியில் இந்தியக் குழுவிற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் தலைமை தாங்கி பயணம்

Posted On: 18 MAY 2025 9:33AM by PIB Chennai

மலேசியாவின்  லங்காவியில் மே 20, 2025 முதல் மே 24-ம் தேதி வரை  நடைபெறும் 17-வது லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சியில் (லிமா 2025) இந்தியக் குழுவிற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமை வகித்து அழைத்துச் செல்கிறார். லிமா 2025-ல் ஒரு இந்திய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திறந்து வைக்கிறார்.

மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், பிஇஎம்எல், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகியவையும் பல பொதுத் துறை மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும், இந்தக் கண்காட்சியில் பங்கேற்று இந்தியப் பாதுகாப்புத் துறையின் திறமையை வெளிப்படுத்தவுள்ளன. இந்த ஆண்டு, டோர்னியர் விமானம், ஒரு இந்திய கடற்படை கப்பல் உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு உற்பத்தி தளவாடங்கள் லிமா 2025-ல் இடம்பெறும்.

கண்காட்சியின் ஒரு பகுதியாக, பாதுகாப்புத் துறை இணையமைச்சர், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலித் பின் நோர்டினைச் சந்திப்பார். இந்தப் பயணம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் விரிவான உத்திசார் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும்.

இந்தியாவும் மலேசியாவும் ஒரு வலுவான மற்றும் பன்முக உறவைக் கொண்டுள்ளன. இது பாதுகாப்பு உட்பட பல துறைகளில் விரிவடைந்துள்ளது.

1991-ல் நிறுவப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் லிமா, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய, மிக முக்கியமான கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

***

(Release ID: 2129394)

TS/PLM/SG

 

 


(Release ID: 2129408) Visitor Counter : 2