ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினத்தையொட்டி இளைஞர்களை மையமாகக் கொண்ட "அனைவருக்கும் யோகா” என்ற முயற்சியில், முன்னணி யோகப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் இணைந்துள்ளன

Posted On: 17 MAY 2025 11:15AM by PIB Chennai

2025 - ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி இளைஞர்களை மையமாகக் கொண்ட “அனைவருக்கும் யோகா” என்ற முயற்சியில்,  யோகப் பயிற்சி அளித்து வரும் முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைவது என்பது அடுத்த தலைமுறையிருக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.

உலகின் பழமையான மற்றும் மிகவும் மதிக்கப்படும் யோகக் கலை  நிறுவனங்களில் ஒன்றான கைவல்யதாமா, “அனைவருக்கும் யோகா” என்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட தொடர் நடவடிக்கைகளை  முன்னெடுத்து வருகிறது. இந்த முயற்சிகளில் ஒன்றாக “இளையோரின் சிந்தனைகளில் யோகா” என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் யோகப் பயிற்சிக்கான பொதுவான நெறிமுறை சார்ந்த பயிற்சிகளை கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு யோகக் கலையை எளிதில் கிடைக்கக்கூடியதாக மாற்றுவதே இதன் நோக்கம். கூடுதலாக, முன்னணி யோகக் கலையில் தலைசிறந்த நிபுணர்கள் பங்கேற்கும்  “யோகினார்” என்ற சர்வதேச மெய்நிகர் உச்சிமாநாட்டை எற்பாடு செய்து அதில் இணையதளம் மூலம் பங்கேற்கச் செய்ய கைவல்யதாமா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதுமை மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய யோகக் கலை வடிவங்கள் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சி, இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக இருக்கும்.

1924 - ம் ஆண்டு சுவாமி குவலயானந்தாவால் நிறுவப்பட்ட கைவல்யதாமா என்ற நிறுவனம், மகரிஷி பதஞ்சலியின் யோகக்கலை தொடர்பான சூத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, யோகக்கலையின் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுகிறது. யோகக்கலையை பாரம்பரியம் மற்றும் அறிவியலுடன் இணைத்து, உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையிலும், எளிதில் அக்கலையைக் கற்றுக்கொள்ளும் வகையிலும் மாற்றுவதற்கும் தனித்துவமான நோக்கத்துடன் கைவல்யதாமா நிறுவனம் நிறுவப்பட்டது.  "அனைவருக்கும் யோகா" என்ற முயற்சியில் நிறுவனத்தின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குகிறது.

 

வரும் நாட்களில் "அனைவருக்கும் யோகா" என்ற இயக்கத்தில் மேலும் பல யோகக்கலையில் பயிற்சி அளித்து வரும் நிறுவனங்கள் இணையும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு யோகக்கலை குறித்த பயிற்சியைப் பெறுவதற்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்பது உறுதி.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129269

 

***

TS/SV/DL


(Release ID: 2129285)