வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய உற்பத்தியாளர்கள் உலகளாவிய சந்தைகளை அணுக தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் உதவியுள்ளன: திரு பியூஷ் கோயல்

Posted On: 16 MAY 2025 3:52PM by PIB Chennai

இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தரக்கட்டுப்பாட்டு ஆணையும் இறுதியில் அந்தந்த துறைகளின் ஆதரவைப் பெற்றுள்ளன. ஏனெனில் அவை தயாரிப்பு தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்திய உற்பத்தியாளர்கள் பெரிய சந்தைகளை அணுகவும் உதவியுள்ளன. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை போட்டித்தன்மையை உறுதி செய்யும் ஒரு அமைப்பை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. நேற்று புதுதில்லியில்  தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) கூட்டிய பங்குதாரர் கூட்டத்தில் மின்சார சாதனங்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இதைத் தெரிவித்தார்.

செப்டம்பர் 20 ஆம் தேதி டிபிஐஐடி-யால் அறிவிக்கப்பட்ட "வீட்டு, வணிக மற்றும்  மின் சாதனங்களின் பாதுகாப்பு" குறித்த ஆணையைச் செயல்படுத்துவதில் தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 இதில் பல்வேறு மின் சாதனங்களில் தரக்கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் தொழில்துறை தங்கள் கவலைகளை முன்வைத்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை எடுத்துரைத்தது,  இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவது உயர்தர தயாரிப்புகள் மட்டுமே. இருப்பினும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, தயாரிக்கப்பட்ட  பொருட்கள் குறித்த தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் பற்றி பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். இணக்க காலக்கெடுவை சீரமைக்க உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மற்றும் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதையும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

தொழில்துறையால் எழுப்பப்பட்ட கவலைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும் தரக்கட்டுப்பாட்டு ஆணையின்  செயல்படுத்தல் காலக்கெடுவை நீட்டிப்பதற்கான கோரிக்கையையும், மரபுவழி இருப்பு பிரச்சினையையும் பரிசீலிக்க ஒப்புக்கொண்டார். பொது நிதியுதவி பெறும் ஆய்வகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள ஆய்வகங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களிலும் உள்ள ஆய்வகங்கள் போன்றவற்றில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கூடுதல் சோதனை வசதிகளை அமைப்பதற்கான திட்டத்தை தொழில்துறையினர் முன்வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதனால் இந்தியாவில் தொழில்துறைக்கு வலுவான மற்றும் அணுகக்கூடிய சோதனை உள்கட்டமைப்பு கிடைக்கும். தரக்கட்டுப்பாட்டு ஆணைகளைச் செயல்படுத்துவதில் ஆலோசனை மற்றும் கூட்டு அணுகுமுறைக்கு அமைச்சகம் உறுதியாக உள்ளது" என்று  வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு ஜிதின் பிரசாதா குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகள், தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நாட்டிற்குள்  உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்கான மத்திய அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் முன்னணி தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் CII, FICCI, ASSOCHAM, CEAMA, RAMA, ICEA, IFMA, SMTA மற்றும் இந்திய தரநிர்ணய அமைவனம்  (BIS) போன்ற  தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள்  பங்கேற்றனர்.

***

(Release ID: 2129081)
SM/PKV/RR/SG

 

 


(Release ID: 2129133) Visitor Counter : 4