சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேபாளத்தின் காட்மாண்டுவில் நடைபெறும் முதலாவது எவரெஸ்ட் சிகரம் குறித்த பேச்சுவார்த்தையில் மலைச்சூழலை பாதுகாக்க ‘உலகளாவிய செயல்திட்டத்திற்கான ஐந்து அம்ச அழைப்பு பற்றி’ மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் எடுத்துரைத்தார்

Posted On: 16 MAY 2025 2:39PM by PIB Chennai

நேபாளத்தின் காட்மாண்டுவில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எவரெஸ்ட் சிகரம் குறித்த பேச்சுவார்த்தையின் தொடக்க அமர்வில் மத்திய  அமைச்சர்  திரு பூபேந்திர யாதவ் இந்தியா சார்பில் கலந்துகொண்டுள்ளார். இந்த உலகளாவிய உயர்நிலை பேச்சுவார்த்தை, ‘பருவநிலை மாற்றம், மலைகள் மற்றும் எதிர்கால மனித சமூகம்’ என்ற மையப்பொருளில் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து  அமைச்சர்களும், பருவநிலை தொடர்பான தலைவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

 இந்தக் கூட்டத்தில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய திரு பூபேந்தர் யாதவ், உலகளாவிய பருவநிலை செயல்பாட்டிற்கு இந்தியாவின் சமரசமற்ற  உறுதிப்பாட்டை வலியுறுத்திய போது இமயமலையையும், இதர மலைச்சூழல்களையும் பாதுகாக்க ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை எடுத்துரைத்தார்.  இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் தாம் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்வது மிகச்சிறந்த கௌரவம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருப்பதற்காக நேபாளத்தை பாராட்டிய திரு யாதவ், மிகப்பரந்த இமாலய பகுதியைக் கொண்டுள்ள இந்தியா, இந்த  மலைசார்ந்த அண்டை நாடுகளுடன் பொதுவான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பிணைப்பையும் பகிர்ந்துகொள்கிறது என்றார். மலைச்சூழலை பாதுகாக்க ‘உலகளாவிய செயல்திட்டத்திற்கான ஐந்து அம்ச அழைப்பு பற்றி’   அவர் எடுத்துரைத்தார்.

நமது பகிரப்பட்ட சுற்றுச்சூழல் பாரம்பரியத்தை பாதுகாக்க  நேபாளத்துடனும், மற்ற அனைத்து  மலைதேசங்களுடனும் கூட்டாக செயல்பட  இந்தியா தயாராக உள்ளது என்று  அவர் கூறினார். நமது புனிதமான மலைகள் நம்பிக்கை  நிலைத்தன்மை  கலங்கரை விளக்கங்களாக தொடர்ந்து உயர்ந்து நிற்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும் என்று  கூறி திரு யாதவ் தமது உரையை நிறைவுசெய்தார்.

இந்த நிகழ்வில் நேபாளப் பிரதமர் திரு கே பி ஷர்மா ஒலி, வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் அர்சு ராணா தேபா, சீன தேசிய மக்கள் காங்கிரசின் துணைத் தலைவர் திரு ஜியாவோ ஜி, சிஓபி-29 தலைவரும், அஜர்பைஜான் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு முக்தார் பபயேவ் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129059

***

SM/SMB/AG/SG

 


(Release ID: 2129103)