கலாசாரத்துறை அமைச்சகம்
இந்தியா புத்தர் பிறந்த நாடு மட்டுமல்ல, அது அவரது உலகளாவிய செய்தியான அகிம்சை, தெளிவான மனநிலை மற்றும் நடுநிலைப் பாதையின் பொறுப்பாளராகவும் உள்ளது- திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
Posted On:
15 MAY 2025 7:40PM by PIB Chennai
வைசாகா புத்த பூர்ணிமா சடங்கு 2025 இன் தொடக்க விழா, புதுதில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று நடைபெற்றது. புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் மகாபரிநிர்வாணத்தை நினைவுகூரும் தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வை கலாச்சார அமைச்சகம் மற்றும் சர்வதேச புத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தன.
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, புனிதமான புத்த பாரம்பரியத்தின் பாதுகாவலராக இந்தியாவின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். "இந்தியா புத்தர் பிறந்த நாடு மட்டுமல்ல, அது அவரது உலகளாவிய செய்தியான அகிம்சை, தெளிவான மனநிலை மற்றும் நடுநிலைப் பாதையின் பொறுப்பாளராகவும் உள்ளது" என்று அவர் கூறினார்.
வளமான பௌத்த பாரம்பரியத்தை எடுத்துரைத்த அமைச்சர், “இந்தியா தனது புனித பாரம்பரியத்தை தொடர்ந்து தீவிரமாகப் பகிர்ந்துகொண்டு பாதுகாத்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், உலகளாவிய பௌத்த உறவுகளை வலுப்படுத்த இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புனித புத்தரின் நினைவுச்சின்னங்களை வெளிப்படுத்துவது மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும். நம்பிக்கை மற்றும் பயபக்தியின் பொக்கிஷங்களாக இருக்கும் இந்த நினைவுச்சின்னங்கள் மங்கோலியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சிறப்பு சுற்றுப்பயணங்களாக அனுப்பப்பட்டுள்ளன, இது வெளிநாடுகளில் உள்ள நமது பௌத்த சகோதரர்களுடன் ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்துகிறது” என்று கூறினார்.
கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, புத்தரின் போதனைகளின் உள்ளடக்கிய பொருத்தத்தை வலியுறுத்தினார். "புத்தரை பின்பற்ற ஒருவர் பௌத்தராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவரது ஞானம் அனைவருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக உள்ளது", என்று அவர் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு பிரதமரின் உரையை மேற்கோள் காட்டி, இந்தியா போரை அல்ல, புத்தரின் போதனைகளை உலகிற்கு வழங்கியுள்ளது என்று திரு ரிஜிஜு கூறினார். இந்தியா அமைதிக்காக பாடுபடுகிறது, ஆனால் அமைதியை சீர்குலைக்க எண்ணினால், அந்த அமைதியைப் பேணுவதற்கு அதிகார 'சக்தி'யைப் பயன்படுத்துவோம் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128921
***
SM/RB/DL
(Release ID: 2128968)