தேசிய மனித உரிமைகள் ஆணையம்
டாக்டர் பால்ராம் சிங் எதிர் மத்திய அரசு - 2023 வழக்கில், அபாயகரமான கழிவுகளை கையால் தூய்மைபடுத்தும் நடைமுறையை ஒழிக்க உச்ச நீதிமன்றத்தின் 14 உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்துகிறது
Posted On:
15 MAY 2025 6:03PM by PIB Chennai
டாக்டர் பால்ராம் சிங் எதிர் மத்திய அரசு - 2023 வழக்கில், அபாயகரமான கழிவுகளை கையால் தூய்மைபடுத்தும் நடைமுறையை ஒழிக்க உச்ச நீதிமன்றத்தின் 14 உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்துகிறது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த நடைமுறை மனித உரிமைகளை, குறிப்பாக சட்டத்தின் முன் கண்ணியம் மற்றும் சமத்துவத்துடன் வாழ்வதற்கான உரிமையை கடுமையாக மீறுவதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பு மற்றும் சட்டப் பாதுகாப்புகள் இருந்தபோதிலும், 2025 ஜனவரி 29 அன்று உச்ச நீதிமன்றத்தால் தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு ஐதராபாத் ஆகிய ஆறு முக்கிய நகரங்களில் முழுமையான தடை அறிவிக்கப்பட்ட போதிலும், நாட்டின் சில பகுதிகளில் அபாயகரமான கழிவுகளை கையால் தூய்மை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆணையம் கருதுகிறது.
எனவே, தேசிய மனித உரிமை ஆணையம் சில நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
***
(Release ID: 2128885)
SM/IR/AG/RJ
(Release ID: 2128900)