சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மே 15, 2025 அன்று உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினத்தன்று 'உள்ளடக்கிய இந்தியா உச்சிமாநாட்டிற்கு' ஏற்பாடு செய்யப்பட உள்ளது
प्रविष्टि तिथि:
14 MAY 2025 6:43PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை மே 15, 2025 அன்று உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு 'உள்ளடக்கிய இந்தியா உச்சிமாநாட்டை' ஏற்பாடு செய்யவிருக்கிறது. உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு டிஜிட்டல் அணுகல் மற்றும் உள்ளடக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உச்சிமாநாடு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இந்த உச்சிமாநாடு புதுதில்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் நேரடி மற்றும் மெய்நிகர் முறையில் நடைபெறும். இது எஸ்பிஐ அறக்கட்டளை மற்றும் தேசிய பார்வையற்றோர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் மிஷன் அணுகல் (தனஞ்சய் சஞ்சோக்தா அறக்கட்டளை) ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டின் நோக்கம், நாட்டில் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் அணுகலை ஊக்குவிப்பதாகும், அதே நேரத்தில் அரசு, தொழில்துறை, கல்வித்துறை, சிவில் சமூகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகம் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு சம வாய்ப்புகள் மற்றும் அணுகக்கூடிய சூழல்களை உறுதி செய்வதாகும். இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் தலைமை தாங்குவார். உச்சிமாநாட்டின் முக்கிய சிறப்பம்சமாக டிஜிட்டல் அணுகல் குறித்த குழு விவாதம் இருக்கும், அங்கு தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் உள்ளடக்கியதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் விவாதிப்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128700
****
RB/DL
(रिलीज़ आईडी: 2128740)
आगंतुक पटल : 27