வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால், கோவா முதலமைச்சர் டாக்டர். பிரமோத் சாவந்த் ஆகியோர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பனாஜியில் இன்று மதிப்பாய்வு செய்தனர்
Posted On:
12 MAY 2025 6:23PM by PIB Chennai
கோவா மாநிலத்தில் 24 மணி நேரமும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் குறித்த பரிந்துரைகளைப் பரிசீலிக்க மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால் ஒப்புக்கொண்டார்
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், கோவா மாநில முதலமைச்சர் திரு. பிரமோத் சாவந்த் மற்றும் நகர்ப்புற மேம்பாடு, திட்டமிடல், சுகாதாரம், வனத்துறை அமைச்சர் திரு விஸ்வஜித் ராணே ஆகியோருடன் பனாஜியில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள முக்கிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் அவர் மதிப்பாய்வு செய்தார்.
அடல் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான இயக்கம் அம்ருத் - 2.0), பிரதமரின்நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம், நவீன நகரங்களைக் கட்டமைப்பதற்கான இயக்கம், நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம், தீன்தயாள் அந்த்யோதயா திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதியுதவித் திட்டம் போன்ற மத்திய அரசின் நகர்ப்புற திட்டங்களின் விரிவான மேம்பாட்டு நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, கோவா மாநில முதலமைச்சர், 24 மணி நேரமும் தடையின்றி சுத்தமான குடிநீர் விநியோகத்திற்கான சிறப்பு நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் (திட்ட செலவு சுமார் ரூ. 652.61 கோடி) நீர்வள ஆதாரத்தை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாடு, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டப் பணிகளின் மறுசீரமைப்பு, ஸ்மார்ட் மீட்டர், ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட முன்னோடித் திட்டங்களுக்கு அம்ருத் - 2.0 இயக்கத்தின் கீழ் மாநிலத்திற்கு குறைந்தபட்சம் ₹326.30 கோடி சிறப்பு நிதி உதவி வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
கோவா மாநிலத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கான கோரிக்கையை பரிசீலிக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128245
***
SM/SV/DL
(Release ID: 2128261)
Visitor Counter : 2