குடியரசுத் தலைவர் செயலகம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்
Posted On:
08 MAY 2025 6:06PM by PIB Chennai
ஈரான் வெளியுறவு அமைச்சர் திரு அப்பாஸ் அரக்ச்சி, இன்று (மே 8, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.
டாக்டர் அரக்ச்சியை குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்ற குடியரசுத் தலைவர், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வு நடைபெறும் சூழலில் அவரது வருகை நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்று குடியரசுத் தலைவர் கூறினார். கலை, கலாச்சாரம், இலக்கியம், இசை, உணவு என அனைத்திலும் இரு நாடுகளிடையே நீண்ட கால தொடர்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நமது இருதரப்பு உறவுகள் வழக்கமான உயர் மட்ட பரிமாற்றங்களின் வலுவான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த 75 ஆண்டுகளில், இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் பல்வேறு துறைகளில் வளர்ந்துள்ளன என அவர் தெரிவித்தார். இரு நாடுகளும் நீண்டகால நட்பைப் பேணி வருவது மட்டுமல்லாமல், பிராந்திய அமைதிக்கும், செழிப்புக்கும் இணைந்து பணியாற்றுவதாக அவர் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவுக்கான ஈரானின் ஆதரவுக்கு குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார்.
ஈரான் அமைச்சரின் இந்த வருகை இந்தியா-ஈரான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
***
(Release ID: 2127750)
SM/PLM/AG/DL
(Release ID: 2127783)
Visitor Counter : 2