விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான "ககன்யான்" திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 06 MAY 2025 6:30PM by PIB Chennai

முதன்முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் "ககன்யான்" திட்டம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, முதல் மனித விண்வெளிப் பயணம் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறையின்  ணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த திட்டத்தின் தற்போதைய நிலை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் செலவு குறைந்த விண்வெளித் திட்டத்தால் வெளிப்படும் பரந்த பொருளாதார நன்மைகள் குறித்து விரிவான  தகவல்களை வழங்கினார்.

இஸ்ரோ  தலைவரும், விண்வெளித் துறை செயலாளருமான டாக்டர் வி. நாராயணன் அமைச்சருடன்  நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

டிவி-டி 1 இயக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்தது மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் ஆளில்லா சோதனை வாகன நிறுத்த இயக்கம் ஆகியவை வரவிருக்கும் சோதனை அட்டவணைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இரண்டாவது சோதனை வாகன பணி (டிவி-டி2) 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து ககன்யானின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மைல்கற்கள் 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்தில் உச்சக்கட்டத்தை அடையும், இந்திய விண்வெளி வீரர்கள் இந்திய மண்ணிலிருந்து ஒரு இந்திய ராக்கெட்டில் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படுவார்கள்.

இதை ஒரு வரலாற்று பணி என்று அழைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், ககன்யான் திட்டம் அறிவியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். "உள்நாட்டு தொழில்நுட்பம், நிதி விவேகம் மற்றும் தொலைநோக்கு அரசியல் தலைமை ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியாவின் எழுச்சியை இது பிரதிபலிக்கிறது" என்று அவர் கூறினார். 2035 ஆம் ஆண்டுக்குள்  இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பது, 2040 க்குள் சந்திரனுக்கு முதல் இந்தியரை அனுப்புவது உள்ளிட்ட விண்வெளித்துறை சார்ந்த  இந்தியாவின் நீண்டகால லட்சியங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தெளிவாக வகுத்துள்ளார் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127312  

 

***

RB/DL


(Release ID: 2127343) Visitor Counter : 22