வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய வெளிநாட்டு வர்த்தக கல்விக்கழகம், வளாகத்திற்கு வெளியே குஜராத்தின் கிஃப்ட் நகரில் மையம் ஒன்றை நிறுவ அனுமதி பெற்றுள்ளது
Posted On:
06 MAY 2025 10:37AM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள இந்திய வெளிநாட்டு வர்த்தக கல்விக்கழகம், வளாகத்திற்கு வெளியே குஜராத்தின் கிஃப்ட் நகரில் மையம் ஒன்றை நிறுவ மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மையம் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிகர்நிலை பல்கலைக்கழக விதிகள் 2023-க்கு இணங்க அமைக்கப்படவுள்ளது.
2025 ஜனவரியில் வழங்கப்பட்ட விருப்பக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு இந்திய வெளிநாட்டு வர்த்தக கல்விக்கழகம் உட்பட்டு இருப்பதால் பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956, பிரிவு 3-ன் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள், தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், விரிவான கல்வித் திட்டங்கள், நிரந்தர வளாகத்திற்கான திட்டம், நவீன நூலக உருவாக்கம் ஆகியவற்றுடன் இந்த மையம் பல துறைகளைக் கொண்ட கல்விக்கழகமாக நிறுவுவதற்கான திட்டத்தை சமர்ப்பிப்பதும், இந்த நிபந்தனைகளில் அடங்கும்.
இந்தியாவின் உலகளாவிய பொருளாதார மையமாக விளங்குகின்ற கிஃப்ட் நகரில் புதிய மையம் ஒன்றை திறக்க இந்திய வெளிநாட்டு வர்த்தக கல்விக்கழகம், அனுமதி பெற்றிருப்பதற்கு மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறுகிய கால பயிற்சி திட்டங்கள், சர்வதேச வர்த்தகத்தில் ஆராய்ச்சி என்பது தவிர இந்த கல்விக்கழகத்தின் சிறப்பு திட்டமான எம்பிஏ (சர்வதேச வணிகம்) என்பது திறன்மிக்க பயிற்சி வழங்க இது வழிவகுக்கும் என்றும், அவர் கூறியுள்ளார்.
பலதுறை சார்ந்த கற்றலை மேம்படுத்துவது, உயர்தர கல்விக்கான அணுகலை விரிவாக்குவது என்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக்கொள்கை 2020-ன் இலக்குகளுக்கு ஏற்புடையதாக இந்த முன்முயற்சி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127199
***
SM/SMB/SG/KR
(Release ID: 2127224)