தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தெலங்கானாவின் யாதாத்ரி போங்கிர் மாவட்டத்தில் உள்ள ஒரு வெடிமருந்து உற்பத்தி ஆலையின் எரிபொருள் கலவை அலகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் இறந்ததாகவும், மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது
Posted On:
05 MAY 2025 6:03PM by PIB Chennai
தெலங்கானாவின் யாதாத்ரி போங்கிர் மாவட்டத்தில் உள்ள கேட்டபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு வெடிமருந்து உற்பத்தி ஆலையின் எரிபொருள் கலவை அலகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் இறந்ததாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது. இந்த சம்பவம் 2025 ஏப்ரல் 29 அன்று நிகழ்ந்ததாககா கூறப்படுகிறது.
இச்செய்தி உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான கடுமையான பிரச்சினைகளை இது எழுப்புகிறது என ஆணையம் கருதுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தெலங்கானா அரசு தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஏப்ரல் 29 அன்று ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, வெடி மருந்து ஆலையின் கலவை அலகு கட்டமைப்பு முழுமையாக இடிந்து விழுந்தது. இந்த நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், வணிக மற்றும் முன்னணி நிறுவனங்களுக்கு வெடிபொருட்களை தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
***
(Release ID: 2127107)
TS/IR/AG/DL
(Release ID: 2127127)
Visitor Counter : 29